டெலிகாம் நிபுணர்கள் சொல்றபடி, இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு முக்கிய இலக்கு இருக்கிறது. அதுதான் ARPU (Average Revenue Per User), அதாவது ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானத்தை அதிகரிப்பது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாடு முழுவதும் 5G உள்கட்டமைப்புக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்த செலவை ஈடுகட்ட, குறைந்த விலை பிளான்களை நீக்கிவிட்டு, வாடிக்கையாளர்களை அதிக விலை கொண்ட பிளான்களுக்கு மாற வைக்கிறார்கள்.
ஃபேமிலி பிளான்களுக்கு முக்கியத்துவம்..
வாடிக்கையாளர்கள் தனிநபர் பிளான்களை விட, அதிக விலை கொண்ட ஃபேமிலி பிளான்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கம்பெனிகள் அழுத்தம் கொடுக்கின்றன. நீங்க ஏற்கெனவே ரூ.549 பிளான் பயன்படுத்தினால், உங்களின் அடுத்த பில்லிங் சைக்கிளில் இருந்து புதிய பிளானுக்கு மாற வேண்டியிருக்கும். இல்லையென்றால், போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டுக்கு (Prepaid) மாறுவது மட்டுமே பணத்தை மிச்சப்படுத்த இருக்கும் ஒரே வழி. மொத்தத்தில், இந்த டெலிகாம் கட்டண உயர்வு சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. அந்த பிளானை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.