காடு, மலை என எங்கிருந்தாலும் போன் பேசலாம்! மொபைல் நெட்வொர்க் உலகையே மாற்றப்போகும் ஸ்டார்லிங்கின் புதிய டெக்னாலஜி!

Published : Mar 26, 2026, 10:32 PM IST

Starlink நெட்வொர்க் இல்லாத இடத்திலும் போன் பேசலாம்! ஏர்டெல் மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் புதிய சாட்டிலைட் தொழில்நுட்பம்.உலகையே மாற்றப்போகும் ஸ்டார்லிங்கின் புதிய டெக்னாலஜி!

PREV
14
Starlink

தொலைத்தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஸ்டார்லிங்க்' (Starlink), ஏர்டெல் ஆப்பிரிக்காவுடன் (Airtel Africa) கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம், மொபைல் நெட்வொர்க் சிக்னல் துளியும் இல்லாத இடங்களிலும் கூட சாட்டிலைட் (Satellite) வழியாக போன் பேசும் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும் வசதி சோதிக்கப்பட உள்ளது.

மலைப் பிரதேசங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் தீவுகள் போன்ற 'டெட் ஜோன்' (Dead Zone) எனப்படும் நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், அங்கு பயணம் செய்பவர்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

24
டைரக்ட்-டு-செல் (Direct-to-Cell) தொழில்நுட்பம்

வழக்கமாக சாட்டிலைட் போன்கள் தனித்துவமானவை மற்றும் விலை உயர்ந்தவை. ஆனால் ஸ்டார்லிங்கின் 'டைரக்ட்-டு-செல்' தொழில்நுட்பத்தின் சிறப்பு என்னவென்றால், இதற்கு சாதாரண ஸ்மார்ட்போன்களே போதுமானது. வான்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் நேரடியாக உங்கள் மொபைலில் உள்ள ரேடியோ அலைவரிசைகளுடன் இணைந்து செயல்படும்.

இதன் மூலம் எவ்வித கூடுதல் உபகரணங்களும் இன்றி மெசேஜ் அனுப்பவும், போன் கால் செய்யவும், இணையத்தைப் பயன்படுத்தவும் முடியும். ஏற்கனவே அமெரிக்காவில் சில முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

34
இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் சேவையைக் கொண்டுவர எலான் மஸ்க் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கான தற்காலிக அனுமதியை அந்நிறுவனம் பெற்றுள்ள போதிலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப ஒப்புதல் தொடர்பான இறுதிக்கட்ட அனுமதிகளுக்காகக் காத்திருக்கிறது. இதற்கிடையில், இந்தியா முழுவதும் பேஸ் ஸ்டேஷன்களை (Base Stations) அமைக்கும் பணிகளை ஸ்டார்லிங்க் முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியாவில் இந்தச் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, கிராமப்புற இணைப்பு மேம்படும் என்பதோடு மட்டுமின்றி, இயற்கைச் சீற்றங்களின் போது மொபைல் டவர்கள் செயலிழந்தாலும் மீட்புப் பணிகளுக்கு இந்த சாட்டிலைட் கனெக்டிவிட்டி பேருதவியாக இருக்கும்.

44
யாருக்கெல்லாம் இது பயனுள்ளதாக இருக்கும்?

அடிக்கடி பயணம் செய்பவர்கள், மலையேறுபவர்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது மொபைல் சிக்னல் சரியாகக் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் பல கோடி மக்களுக்கு இது ஒரு தீர்வாக அமையும். அவசரக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு இனி டவர் சிக்னலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories