கரண்ட் பில் கம்மியாகணுமா? அப்போ 1.5 டன் ஏசி போதுமா? ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனிக்க வேண்டிய 10 'சீக்ரெட்' விஷயங்கள்!

Published : Mar 26, 2026, 10:21 PM IST

AC Buying Guide ஆன்லைனில் ஏசி வாங்குபவர்களுக்கான வழிகாட்டி. டன் அளவு முதல் மின்சார சேமிப்பு வரை கவனிக்க வேண்டிய 10 டிப்ஸ் இதோ! கவனிக்க வேண்டிய 10 'சீக்ரெட்' விஷயங்கள்!

PREV
18
AC Buying Guide

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க பலரும் தற்போது ஏசி (Air Conditioner) வாங்கத் திட்டமிட்டு வருவீர்கள். முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று வாங்கிய காலம் போய், இப்போது அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் தள்ளுபடி விலையில் ஏசி வாங்குவது ட்ரெண்டாகிவிட்டது. ஆனால், ஆன்லைனில் ஏசி வாங்கும்போது வெறும் விலையை மட்டும் பார்த்தால் போதாது. உங்கள் பணத்திற்கும், வீட்டுத் தேவைக்கும் ஏற்ற சரியான ஏசியைத் தேர்ந்தெடுக்க இந்த 10 விஷயங்களை மறக்காமல் சரிபார்க்கவும்.

28
விண்டோ ஏசியா? ஸ்பிளிட் ஏசியா?

முதலில் உங்கள் அறையின் வசதிக்கு ஏற்ப எந்த வகை ஏசி வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் அறையில் ஜன்னல் வசதி இருந்து, பட்ஜெட்டும் குறைவாக இருந்தால் 'விண்டோ ஏசி' (Window AC) சிறந்த தேர்வு. அதுவே பெரிய அறையாக இருந்து, சத்தம் குறைவாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும் என நினைத்தால் 'ஸ்பிளிட் ஏசி' (Split AC) வாங்கலாம்.

38
அறையின் அளவிற்கு ஏற்ற டன் (Tonnage)

அறையின் அளவைப் பொறுத்தே ஏசியின் டன் அளவைத் தேர்வு செய்ய வேண்டும்.

• 120 சதுர அடி வரை - 1 டன் (1 Ton)

• 120 முதல் 180 சதுர அடி வரை - 1.5 டன் (1.5 Ton)

• 180 சதுர அடிக்கு மேல் - 2 டன் (2 Ton)

தவறான டன் அளவைத் தேர்வு செய்தால், அது மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதோடு குளிர்ச்சியையும் பாதிக்கலாம்.

48
இன்வெர்ட்டர் vs நான்-இன்வெர்ட்டர்

நீண்ட காலப் பயன்பாட்டிற்கு 'இன்வெர்ட்டர் ஏசி' (Inverter AC) சிறந்தது. இது மின்சாரத்தைச் சேமிப்பதோடு, சத்தம் இல்லாமலும் இயங்கும். நான்-இன்வெர்ட்டர் ஏசிகளின் விலை குறைவாக இருந்தாலும், அவை அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

58
ஸ்டார் ரேட்டிங் (Star Rating) மிக முக்கியம்

ஏசியின் ஸ்டார் ரேட்டிங் உங்கள் மின்சார பில்லை தீர்மானிக்கும். 3-ஸ்டார் ஏசிகள் விலை குறைவு, ஆனால் 5-ஸ்டார் ஏசிகள் ஆரம்பத்தில் விலை அதிகமாக இருந்தாலும், நீண்ட காலத்தில் உங்கள் மின்சாரக் கட்டணத்தைப் பெருமளவு குறைக்கும்.

68
காப்பர் காயில் (Copper Coil) இருக்கிறதா?

ஏசி வாங்கும்போது அதில் காப்பர் காயில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். அலுமினியம் காயிலை விட காப்பர் காயில் விரைவாக குளிர்ச்சியைத் தருவதோடு, நீடித்து உழைக்கும்; பழுதுபார்ப்பதும் எளிது.

78
நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள்

டர்போ கூலிங் (Turbo Cooling), ஆட்டோ ரீஸ்டார்ட் (Auto Restart), ஸ்லீப் மோடு (Sleep Mode) போன்ற வசதிகள் இந்தியக் கோடைக்கு மிகவும் அவசியமானவை. இது தவிர, மொபைல் ஆப் அல்லது வாய்ஸ் அசிஸ்டண்ட் மூலம் இயக்கும் வைஃபை (Wi-Fi) வசதி கொண்ட ஸ்மார்ட் ஏசிகளையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

88
மறைமுகக் கட்டணங்கள் மற்றும் வாரண்டி

ஆன்லைனில் ஏசி வாங்கும்போது அதன் விலையில் இன்ஸ்டாலேஷன் கட்டணம் (Installation Cost) அடங்காது. இதற்கு தனியாக ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை செலவாகும். அதேபோல், கம்ப்ரஸருக்கு குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வாரண்டி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாங்குவதற்கு முன் அந்தப் பொருளின் கஸ்டமர் ரிவியூக்களை (Reviews) ஒருமுறை படித்துப் பார்ப்பது உங்களை ஏமாற்றத்திலிருந்து காக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories