கொடுக்கப்பட்ட சலுகைகளில், சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி ஒரு குறிப்பிடத்தக்க சிறந்த சலுகையாகும். இந்த கைபேசியின் 12GB+256GB மாறுபாட்டின் பட்டியல் விலை சந்தையில் சுமார் ரூ. 1,49,999 ஆகும். ஆனால் இதை நீங்கள் இந்த சேலில் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது 74,999 ரூபாய்க்கு அந்த போனை நீங்கள் வாங்க ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
அதாவது இந்த போன் வாங்குபவர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பாங்க் ஆஃப் பரோடா மற்றும் எச்எஸ்பிசி கார்டுகள் வழங்குகிறது. மேலும் சில வங்கி கார்டுகள் மூலம் 9,000 ரூபாய் மதிப்புள்ள பம்பர் ரிவார்டுகளை அன்லாக் செய்ய வேண்டும். மேலும் இந்த போனுக்கு நோ-காஸ்ட் EMI விருப்பங்களும் உள்ளது.