அமேசான் கிரேட் இந்தியன் சேல்; அடித்து நொறுக்கப்பட்ட விலை - 60% ஆஃபரில் வாங்க சிறந்த Tablets இதோ!

First Published Oct 27, 2024, 10:12 PM IST

Tablets 60% Offer : அமேசான் கிரேட் இந்தியன் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024ல், டேப்லெட்டுகள் உட்பட பலதரப்பட்ட பொருட்கள் 60 சதவிகித ஆஃபரில் கிடைக்கிறது.

Amazon Sale tablets

கடந்த மாதம் துவங்கிய அமேசான் கிரேட் இந்தியன் சேல் வருகின்ற அக்டோபர் 29ம் தேதி முடிவடையவுள்ளது. மேலும் இந்த அதிரடி ஆஃபரில் Apple, Samsung, Xiaomi மற்றும் பல நம்பகமான பிராண்டுகளின் டேப்லெட்டுகளுக்கு அதிரடியாக 60% வரை தள்ளுபடி தரப்படுகிறது. மேலும் இந்த பதிவில் டாப் 3 டேப்லெட்கள் மற்றும் அவற்றின் அதிரடி விலை குறைப்பு குறித்து காணலாம்.

ரீசார்ஜ் கட்டணங்கள் குறையுது.. மொபைல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!

apple ipad 10th gen

சக்திவாய்ந்த A14 பயோனிக் சிப்பைக் கொண்ட ஆப்பிள் ஐபேட் (10th GEN) கேமிங் மற்றும் ஆக்கப்பூர்வமான பல பணிகளுக்கு தேவையான விதிவிலக்கான செயல்திறனை இந்த டேப்லெட் வழங்குகிறது. இது சீரான மற்றும் வேகமான செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும் இந்த அசத்தலான டேப்லெட் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது துடிப்பான வண்ணங்கள் மற்றும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது. ஹை குவாலிட்டி வீடியோ பார்ப்பதற்கும், புகைப்பட எடிட்டிங் செய்வதற்கும் சிறந்த டேப்லெட் ஆகும். சுமார் 44,900 ரூபாய்க்கு விற்பனையான இந்த டேப்லெட், அமேசான் சேலில் இப்பொது சுமார் 31,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Latest Videos


samsung galaxy tab s9 fe

IP68 நீர் மற்றும் தூசி ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது இந்த Samsung Galaxy Tab S9 FE. கொஞ்சம் கூட நீங்கள் கவலைப்படாமல் பல்வேறு (கால) சூழல்களில் இந்த டேப்லெட்டை பயன்படுத்த முடியும். குறிப்பு வரைதல் மற்றும் துல்லியமான உள்ளீடு ஆகியவற்றிற்கான உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில் இது S பென்னுடன் வருகிறது. இது 90 ஹெர்ட்ஸ் Refresh Rate தெளிவான காட்சியைக் கொண்டுள்ளது, இது மென்மையான காட்சிகள் மற்றும் மீடியா நுகர்வு மற்றும் கேமிங்கிற்கான அதிவேக அனுபவத்தை உறுதி செய்கிறது. சுமார் 44,999 ரூபாய்க்கு விற்பனையான இந்த டேப்லெட் இந்த சேலில் சுமார் 29,999க்கு விற்பனையாகிறது. 

xiaomi pad 6

Xiaomi Pad 6.. 144Hz Refresh Rate கொண்டுள்ளது, இது அதி மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வினைத்திறனை வழங்குகிறது. இது கேமிங் மற்றும் வீடியோ பிளேபேக்கிற்கு ஏற்றதாக அமைகிறது. அதன் 2.8K தெளிவுத்திறன் டிஸ்ப்ளே, 1 பில்லியன் வண்ணங்களைக் கொண்ட பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்குகிறது. இது திரைப்படங்கள் மற்றும் கேம்களுக்கான பார்வை அனுபவத்தை மேம்படுத்துகிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 870 செயலியுடன் வருகிறது. சீராக இயக்குவதற்கான உயர் செயல்திறனை உறுதி செய்கிறது இந்த டேப்லெட். சுமார் 41,999 ரூபாய்க்கு விற்பனையான இந்த டேப்லெட் அமேசான் சேலில் சுமார் 22,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தண்ணீர் கட்டணத்தை ரொக்கப் பணம் செலுத்துவதை நிறுத்த 5 காரணங்கள்: டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எதிர்காலம்

click me!