Samsung மொபைல் உலகில் ஒரு புரட்சி! சாம்சங்கின் மூன்று மடிப்பு போன் விலை குறைகிறதா?
ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவானான சாம்சங் (Samsung), தனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான 'கேலக்ஸி Z ட்ரைஃபோல்ட்' (Galaxy Z TriFold) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற APEC உச்சி மாநாட்டில் டீசர் காட்டப்பட்டதிலிருந்தே, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், இந்த போனின் விலை நாம் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கலாம் என்ற புதிய தகவல் கசிந்துள்ளது.
25
எதிர்பாராத விலைக் குறைப்பு! லீக் ஆன தகவல்
தென் கொரியாவின் நம்பகமான டிப்ஸ்டரான 'yeux1122' என்பவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, சாம்சங் ட்ரைஃபோல்ட் போனின் விலை சுமார் 3.6 மில்லியன் கொரிய வான் (KRW) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2,25,000 ஆகும். முன்னதாக இந்த போனின் விலை ரூ.2,50,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த விலைக் குறைப்பு வாடிக்கையாளர்களுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
35
டிசம்பரில் வெளியீடு? யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சாம்சங் நிறுவனம் தனது விற்பனைப் பிரிவுகளுக்கு 'உள் அறிவிப்பு' ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதன்படி இந்த டிசம்பர் மாதத்திலேயே இந்த போன் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு 'Limited Edition' ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
• தென் கொரியா, சீனா, சிங்கப்பூர், தைவான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் மட்டுமே முதலில் வெளியாகலாம்.
• உலகம் முழுவதும் வெறும் 20,000 முதல் 30,000 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஒரே ஒரு கலர் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே இது கிடைக்கும்.
இந்த போனின் ஹைலைட்டே அதன் டிசைன் தான். 'G' வடிவத்தில் உள்நோக்கி மடியும் இரண்டு கீல்கள் (Hinges) இதில் உள்ளன.
• முழுமையாக விரித்தால், இது 9.96 இன்ச் அளவுள்ள ஒரு பெரிய டேப்லெட் போல மாறிவிடும்.
• மடித்து வைத்தால், 6.54 இன்ச் திரையுடன் சாதாரண ஸ்மார்ட்போன் போலக் காட்சியளிக்கும். இதன் கவர் டிஸ்பிளே 2600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு.
55
மிரட்டலான செயல்திறன் மற்றும் கேமரா
விலைக்கு ஏற்றவாறு சிறப்பம்சங்களிலும் சாம்சங் சமரசம் செய்யவில்லை.
• சிப்செட்: அதிவேகமான Snapdragon 8 Elite ப்ராசஸர் மற்றும் 16GB ரேம் இதில் இருக்கும்.
• பேட்டரி: மூன்று மடிப்புகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில், 5,437mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி பொருத்தப்படலாம்.
• கேமரா: பின்பக்கத்தில் 200MP முதன்மை கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஃபோல்டபிள் போன்களிலேயே சிறந்த கேமரா போனாக இதை மாற்றும்.
ஹுவாவே மேட் எக்ஸ்டி (Huawei Mate XT) போன்ற போட்டியாளர்களுக்கு சாம்சங்கின் இந்த ட்ரைஃபோல்ட் கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.