ஓசியில் ஜெமினி யூஸ் பண்றீங்களா? அப்போ இது உங்களுக்குத்தான்! கூகுள் போட்ட புது ரூல்ஸ்.. உஷார்!

Published : Nov 28, 2025, 09:23 PM IST

Google Gemini 3 Pro கூகுள் ஜெமினி 3 ப்ரோ இலவச பயன்பாட்டு வரம்புகளில் மாற்றம்! இனி தினமும் எவ்வளவு நேரம் பயன்படுத்த முடியும்? புதிய விதிமுறைகள் மற்றும் முழு விவரம் உள்ளே.

PREV
15
Google Gemini 3 Pro கூகுள் ஜெமினி பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! இலவச சேவையில் வந்த திடீர் மாற்றம்!

செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாட் ஜிபிடிக்கு (ChatGPT) கடும் போட்டியாக விளங்கும் கூகுளின் ஜெமினி (Gemini), தனது பயனர்களுக்குப் புதிய அறிவிப்பு ஒன்றை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக 'Thinking With Gemini 3 Pro' என்ற அட்வான்ஸ்டு மாடலை இலவசமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, தினசரி பயன்பாட்டு வரம்புகளில் (Usage Limits) கூகுள் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இது பயனர்கள் மத்தியில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

25
இலவச சேவையில் அதிரடி மாற்றம்!

கூகுளின் சப்போர்ட் பக்கத்தில் (Support Page) செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி, இலவச பயனர்களுக்கான தினசரி பயன்பாட்டு வரம்புகள் இனி "அடிக்கடி மாறக்கூடும்" (Change Frequently) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை இருந்தது போல ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேள்விகளை கேட்க முடியாது. அந்த நேரத்தில் சர்வரில் உள்ள கூட்டத்தைப் பொறுத்து (System Load), உங்களுக்கு வழங்கப்படும் அனுமதி கூடலாம் அல்லது குறையலாம்.

35
அமெரிக்காவில் அமல்.. இந்தியாவில் எப்போது?

இந்த மாற்றத்தை முதன்முதலில் 9to5Google இணையதளம் கண்டுபிடித்தது. தற்போதைய நிலவரப்படி, இந்த புதிய விதிமுறைகள் அமெரிக்காவுக்கான கூகுள் சப்போர்ட் பக்கத்தில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியப் பக்கத்தில் இன்னும் பழைய விதிமுறங்களே உள்ளன. இருப்பினும், விரைவில் இந்த மாற்றம் உலக அளவில் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. ஜெமினி 3 ப்ரோவின் மேம்பட்ட வசதிகளைப் பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.

45
கேள்விகளின் எண்ணிக்கை முக்கியமல்ல.. 'டோக்கன்' தான் முக்கியம்!

கூகுளின் இந்தக் கட்டுப்பாடு நீங்கள் கேட்கும் கேள்விகளின் எண்ணிக்கையை (Number of Prompts) பொறுத்தது அல்ல; அது 'டோக்கன்' (Token) அடிப்படையிலானது.

• நீங்கள் கேட்கும் கேள்வி எளிமையாக இருந்தால், குறைவான டோக்கன்கள் செலவாகும். நிறைய கேள்விகள் கேட்கலாம்.

• அதுவே ஆழமான சிந்தனை தேவைப்படும் (Reasoning) சிக்கலான கேள்வியாக இருந்தால், அதிக டோக்கன்கள் செலவாகும். இதனால் சில கேள்விகளிலேயே உங்கள் தினசரி கோட்டா முடிந்துவிடலாம்.

55
நோட்புக் எல்.எம் (NotebookLM) சேவையிலும் கட்டுப்பாடு!

ஜெமினி மட்டுமல்லாமல், கூகுளின் மற்றொரு பிரபலமான சேவையான NotebookLM-லும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான டிமாண்ட் காரணமாக, இலவச பயனர்கள் மட்டுமின்றி, பணம் செலுத்திப் பயன்படுத்தும் 'AI Pro' பயனர்களுக்கும் சில முக்கிய வசதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பிறகு இவை மீண்டும் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

எனவே, ஜெமினி 3 ப்ரோவை இலவசமாகப் பயன்படுத்துபவர்கள், இனி கவனமாகத் திட்டமிட்டுத் தங்கள் கேள்விகளைக் கேட்பது நல்லது!

Read more Photos on
click me!

Recommended Stories