சாம்சங் Galaxy A35-இன் 128GB அடிப்படை மாடல் முதலில் ₹30,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது அமேசானில் இது வெறும் ₹20,903-க்கு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, சில குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது, மேலும் ₹1,250 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் போனின் விலை ₹19,653 ஆகக் குறைகிறது. இதைவிட சிறப்பானது, அமேசான் வழங்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மதிப்பு ₹7,000 ஆக இருந்தால், Galaxy A35-ஐ வெறும் ₹13,000-க்கு வாங்கலாம்! பழைய போனின் நிலைமை மற்றும் மாடலைப் பொறுத்து எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.