இப்போது எலக்ட்ரிக் பஸ் புதிதாக விட்டு இருக்கிறார்கள். அதை தயாரித்தது அசோக் லேலண்ட் கம்பெனி. முதலில் அதை வாங்கி போட்டது மும்பை. அந்த மும்பையில் இப்போது எங்களுக்கு எலக்ட்ரிக் பஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற மாநிலங்களும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். என்ன காரணம் என்று கேட்டால் அதில் சிட்டிங் கெபாசிட்டி ரொம்ப கம்மி. இரண்டாவது ஸ்டாண்டிங் கெப்பாசிட்டி ரொம்ப கம்மி. ஏற்ற, இறக்க தாழ்தள பேருந்து. மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிற இடத்தில் வண்டியை நிறுத்தினால் வண்டி சீஸ் ஆகிவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அடுத்து சென்சார் பஸ் என்பதால் லோக்கல் மெக்கானிக் அல்லது சாதாரண மெக்கானிக் அந்த வண்டியை சரி செய்ய முடியாது. கம்பெனியின் மெக்கானிக்தான் வர வேண்டும். இந்த நான்கு காரணங்களுக்காக எந்த மாநிலமும் வாங்க முன்வரவில்லை.
ஒரு வண்டியின் விலை ரூ.86 லட்சம். அந்தப் பேருந்தின் பேட்டரியை பார்த்தால் பஸ்ஸில் பாதி வரும். இதில் என்னவாயிற்று என்றால் தொழிலாளர்களுக்கும் கொடுக்க முடியவில்லை. எங்கேயும் வாங்கி போடவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும். தமிழக அரசு இந்த பஸ்ஸை வாங்கியதற்கு கமிஷன் வாங்கினார்களா? வாங்கவில்லையா? என்பதை சொல்ல முடியாது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக பேருந்தை வாங்கி போட்டு விட்டார்கள். அசோக் லேலாண்டின் கொலாப்ரேஷன் தான் ஜெர்மனியில் இருக்கக்கூடிய ஓஹெச்எம். அந்த பேருந்துகளின் பக்கவாட்டில் பார்த்திருப்பீர்கள், அவர்களது லோகோ இருக்கும். அந்த கம்பெனியுடன் இவர்கள் ஒப்பந்தம் போட்டு ஒரு நாளைக்கு ஒரு வண்டிக்கு 15 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு கொடுக்க வேண்டும்.