லேப்டாப்பில் எதுவும் ஸ்டோர் பண்ண முடியாது! விரைவில் வருகிறது ஜியோ கிளவுட் லேப்டாப்!

First Published | Nov 20, 2023, 4:59 PM IST

இரண்டு ஜியோ புக் லேப்டாப்களை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ மூன்றாவதாக கிளவுட் லேப்டாப்பை வெளியிட தயாராகி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய பட்ஜெட் ரேஞ்ச் லேப்டாப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே 2022ஆம் ஆண்டில் தனது ஜியோ புக் லேப்டாப்பை ரூ.16,000 க்கு வெளியிட்டது. பின் இந்த ஆண்டில் புதிய ஜியோபுக் லேப்டாப்பை ரூ.16,499 விலையில் அறிமுகப்படுத்தியது. இப்போது மூன்றாவதாக கிளவுட் லேப்டாப் ஒன்றை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ தயாராகி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ, கிளவுட் லேப்டாப்பை சில மாதங்களில் விற்பனைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறது. இதற்காக ஹெச்பி, ஏசர், லெனோவா போன்ற முன்னணி லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Tap to resize

இந்த கிளவுட் லேப்டாப் விலை சுமார் ரூ.15,000 இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. "லேப்டாப்பின் விலை, மெமரி, பிராசஸர் போன்றவற்றைப் பொறுத்தது விலை இருக்கும். ஹார்டுவேர்களால் லேப்டாப்பில் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கிறது. ஆனால், கிளவுட் லேப்டாப்பில் முழு செயல்பாடும் ஜியோ கிளவுட்டில் நடைபெறுவது போல வடிவமைக்கிறோம்” என்று ஜியோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

ஸ்டோரேஜுக்கு முழுக்க ஜியோ கிளவுட் மெமரியை பயன்படுத்துவதால், 50,000 ரூபாய் வரை இருக்கக்கூடிய லேப்டாப்பின் விலை ரூ.20,000 க்குள் குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

கிளவுட் லோப்டாப் தயாரிப்புக்கான சோதனைகள் HP குரோம்புக்கில் நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ChromeBooks லேப்டாப்கள் கூகுள் நிறுவனத்தின் ChromeOS இயங்குதளத்தில் செயல்படுகின்றன. அதில் ஹார்டுவேர் ஸ்டோரேஜுக்குப் பதிலாக கூகுள் கிளவுட் மெமரி பயன்படுத்தப்படுகிறது.

இந்த லேப்டாப் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஜியோ கிளவுட் மெமரியை பயன்படுத்த மாதாந்திர சந்தாவை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. கிளவுட் பிசி (Cloud PC) சாப்ட்வேரை டெஸ்க்டாப்பிலும் ஸ்மார்ட் டிவியிலும் பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

ஜியோ கிளவுட் மாதாந்திர சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஜியோ சேவைகளை இலவசமாக வழங்கவும் ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இருப்பினும், சிறப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் சேவைகளைப் பெற தனியாக அதற்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

Latest Videos

click me!