பட்ஜெட் விலையில் மொபைல், டேப்லெட்.. ரெட்மி செய்த சம்பவம்.. கதறும் ஆப்பிள், சாம்சங்

Published : Jan 07, 2026, 03:46 PM IST

Xiaomi நிறுவனம் இந்தியாவில் Redmi Note 15 ஸ்மார்ட்போன் மற்றும் Redmi Pad 2 Pro டேப்லெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த Snapdragon புராசசர், மேம்பட்ட கேமரா மற்றும் பெரிய பேட்டரி போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளன.

PREV
14
ரெட்மி நோட் 15

2026-ஆம் ஆண்டை பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கும் வகையில், Xiaomi நிறுவனம் இந்தியாவில் Redmi Note 15 ஸ்மார்ட்போன் மற்றும் Redmi Pad 2 Pro டேப்லெட்டை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் வெற்றிகரமாக ஓடிய Redmi Note சீரிஸ், சமீப காலங்களில் சில மாற்றங்களை சந்தித்தாலும், Note 15 அறிமுகம் மீண்டும் அந்த சீரியஸை கவனத்தில் கொண்டு வந்துள்ளது. புதிய வடிவமைப்பு, சக்திவாய்ந்த புராசசர் மற்றும் மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பம் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

24
ரெட்மி நோட் 15 விலை

Redmi Note 15-ன் இந்திய விலை ரூ.22,999-இல் தொடங்குகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல். 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.24,999-க்கு கிடைக்கிறது. வங்கி ஆஃபராக ரூ.3,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுவதால், ஆரம்ப விலை ரூ.19,999 ஆக குறைகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 12 முதல் இந்தியாவில் தொடங்குகிறது. மேலும், Redmi Pad 2 Pro டேப்லெட் Wi-Fi மாடலுக்கு ரூ.24,999-க்கும், 5G ஆதரவு கொண்ட மாடலுக்கு ரூ.27,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 8GB + 256GB 5G வேரியண்ட் ரூ.29,999 ஆகும்.

34
ஆண்ட்ராய்டு 15 ஹைப்பர்ஓஎஸ்

Redmi Note 15 ஸ்மார்ட்போன் 6.77 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் Gorilla Glass பாதுகாப்புடன் வருகிறது. வெறும் 7.35mm தடிப்பும், 178 கிராம் எடையும் கொண்ட இந்த போன், IP66 மற்றும் MIL-STD சான்றிதழ்களுடன் அதிக பாதுகாப்பையும் வழங்குகிறது. Snapdragon 6 Gen 3 சிப்செட், Android 15 அடிப்படையிலான HyperOS 2, 108MP பின்புற கேமரா, 20MP முன்புற கேமரா மற்றும் 5,520mAh பேட்டரி ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

44
ரெட்மி பேட் 2 ப்ரோ

Redmi Pad 2 Pro டேப்லெட் 12.1 இன்ச் பெரிய டிஸ்ப்ளே, 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் Dolby Vision ஆதரவுடன் வருகிறது. Snapdragon 7s Gen 4 புராசசர், 8GB RAM, அதிகபட்சம் 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12,000mAh பெரிய பேட்டரி இதன் முக்கிய அம்சங்கள். 33W சார்ஜிங் ஆதரவுடன், பொழுதுபோக்கு மற்றும் வேலை இரண்டிற்கும் ஏற்ற ஒரு டேப்லெட்டாக இது உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories