8550mAh பேட்டரி.. கூலிங் ஃபேன்.. பவர் மான்ஸ்டர் மொபைலை களத்தில் இறக்கிய ரெட்மி.. எந்த மாடல்?

Published : Apr 22, 2026, 01:43 PM IST

ரெட்மி தனது K சீரிஸில் புதிய K90 மேக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி, டெக் உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. அதிக பெர்ஃபார்மன்ஸ் மற்றும் கேமிங் அனுபவத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த போன், பல மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

PREV
14
ரெட்மி கே90 மேக்ஸ்

சீன ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் கவனம் செலுத்தும் வகையில் ரெட்மி தனது புதிய கே90 மேக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. கே சீரியஸில் ஏற்கனவே கே90 மற்றும் கே90 ப்ரோ மேக்ஸ் வெளியான நிலையில், இந்த புதிய பதிப்பு “பெர்ஃபார்மன்ஸ் கிங்” என ரசிகர்களிடம் பேசப்படுகிறது. குறிப்பாக கேமிங் மற்றும் ஹெவி யூசர்களை குறிவைத்ததாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.83 இன்ச் அளவிலான 1.5கே டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

24
மீடியாடெக் டைமன்சிட்டி 9500

165Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பிரைட்னஸ் ஆகியவை ஸ்க்ரீனை மிகவும் ஸ்மூத்தாகவும், பிரகாசமாகவும் மாற்றுகின்றன. HDR10+ மற்றும் டால்பி விஷன் ஆதரவு இருப்பதால், வீடியோ மற்றும் கேமிங் அனுபவம் இன்னும் மேம்படுகிறது. பெர்ஃபார்மன்ஸில், மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

34
ஆக்டிவ் கூலிங் ஃபேன்

அதிகபட்சமாக 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் கிடைக்கிறது. கேமிங் அனுபவத்தை உயர்த்த D2 டிஸ்ப்ளே சிப், பெரிய கூலிங் சிஸ்டம் மற்றும் ஆக்டிவ் கூலிங் ஃபேன் போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் ஹீட்டிங் குறைவாக இருக்கும். கேமரா பகுதியை பார்த்தால், 50MP பிரதான கேமரா மற்றும் 8MP செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

44
ரெட்மி கே90 மேக்ஸ் விலை

கூடவே, போஸ் நிறுவனத்துடன் இணைந்து டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மூலம் ஆடியோ அனுபவமும் சிறப்பாக இருக்கும். இந்த போனின் முக்கிய ஹைலைட் அதன் 8550mAh பேட்டரி. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. IP66, IP68, IP69 பாதுகாப்பு சான்றிதழ்களுடன் வருகிறது. விலை சுமார் ரூ.41,000 முதல் ரூ.64,000 வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் சில்வர், ஷேடோ பிளாக், ஸ்கை ப்ளூ நிறங்களில் கிடைக்கும் இந்த போன், ஹை-எண்ட் யூசர்களை கவரும் சக்தி கொண்டதாக தெரிகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories