Realme Watch S5 : ஒருமுறை சார்ஜ் போட்டா 20 நாள் தாங்கும்.. ரியல்மி வாட்ச் S5 விலை எவ்வளவு? அம்சங்கள் இதோ

Published : May 24, 2026, 04:15 PM IST

Realme Watch S5 : ரியல்மி தனது புதிய Watch S5 ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் ரூ.7,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச் 1.97 அங்குல AMOLED திரை, 20 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுள் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

PREV
14
ரியல்மியின் புதிய ஸ்மார்ட்வாட்ச்

இந்திய தொழில்நுட்ப சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரியல்மி தனது புதிய Watch S5 மூலம் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரியல்மி 16T உடன் இந்தியாவில் அறிமுகமான இந்த வாட்ச், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பல்வேறு உடல்நல அம்சங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த சாதனம் கிடைக்கும், தினசரி பயன்பாட்டையும் உடற்பயிற்சி தேவைகளையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

24
ரியல்மி Watch S5 விலை

ரியல்மி Watch S5-ன் விலை ரூ.7,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணல் வெள்ளை மற்றும் கல் சாம்பல் என இரண்டு நிறங்களில் இது கிடைக்கும். ஜூன் 5ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை பிரிவில் பிரீமியம் அம்சங்களை வழங்கும் முயற்சியாக இந்த வாட்ச் பார்க்கப்படுகிறது.

34
ரியல்மி Watch S5 அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்வாட்சில் 1.97 அங்குல AMOLED திரை இடம்பெற்றுள்ளது. 1500 நிட்ஸ் பிரகாசம், 60Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் எப்போதும் செயல்படும் திரை வசதி இதன் முக்கிய அம்சங்களாகும். புளூடூத் அழைப்பு வசதி மூலம் கைப்பேசியுடன் இணைத்து நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் ஓட்டம், மிதிவண்டி, யோகா, இறகுப்பந்து உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

44
உடல்நலம் மற்றும் அதிநவீன வசதிகள்

உடல்நல அம்சங்களிலும் இந்த வாட்ச் பல வசதிகள் உள்ளன. ரத்த ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு, இதய துடிப்பு அளவீடு, தூக்க கண்காணிப்பு, மனஅழுத்த நிலை மற்றும் சத்த அளவீடு போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 5ATM நீர் எதிர்ப்பு திறனுடன் வரும் இந்த வாட்ச், ஈரமான கைகளாலும் இயக்கக்கூடியதாக கூறப்படுகிறது. ஒரே சார்ஜில் 20 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories