இந்தியாவே ஆடிப்போச்சு.. 200MP டெலிஃபோட்டோ, 4K 120fps வீடியோ.. ரியல்மி GT 8 Pro தெறிக்குது.!

Published : Nov 13, 2025, 01:06 PM IST

ரியல்மி GT 8 Pro ஸ்மார்ட்போன் நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த மொபைல், 200MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் Ricoh GR கேமரா சிஸ்டம் போன்ற ப்ரோ-கிரேட் கேமரா அம்சங்களுடன் வருகிறது.

PREV
14
ரியல்மி GT 8 Pro ஸ்மார்ட்போன்

ரியல்மியின் அடுத்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் Realme GT 8 Pro நவம்பர் 20-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. அறிமுகத்திற்கு முன்பே நிறுவனமானது இந்த மொபைலின் கேமரா ஃபெச்சர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக புகைப்படக்கலையை விரும்பும் பயனர்களுக்காகவே GT 8 Pro வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரியல்மி தெரிவித்துள்ளது. Ricoh GR கேமரா சிஸ்டம், 200MP அல்ட்ரா-கிளாரிட்டி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ப்ரோ-கிரேட் வீடியோ ஃபீச்சர்கள் ஆகியவை இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடல் சீனாவில் அக்டோபரில் அறிமுகமானது.

24
ரியல்மி GT அம்சங்கள்

GT 8 Pro-வில் உள்ள Ricoh GR கேமரா சிஸ்டம் 50MP ஆன்டி-க்ளேர் பிரைமரி கேமராவை மையமாகக் கொண்டது. ரிக்கோ ஆப்டிக்கல் ஸ்டாண்டர்ட்டில் உருவாக்கப்பட்ட 7P லென்ஸ் மற்றும் 5 லேயர் கோட்டிங் க்ளேர் மற்றும் கோஸ்டிங் பிரச்சனையை குறைக்கிறது. ரிக்கோ GR மோடில் 28mm மற்றும் 40mm ஃபோகல் லென்த், பாசிட்டிவ், நெகட்டிவ், ஹை-கான்ட்ராஸ்ட் B&W, ஸ்டாண்டர்ட், மோனோடோன் என ஐந்து ஃபிலிம்-ஸ்டைல் கலர் ப்ரொஃபைல்களும் கிடைக்கின்றன. அதோடு ரிக்கோ-ஸ்டைல் ஷட்டர் சவுண்டும், தனிப்பயன் டோனிங் மற்றும் வாட்டர்மார்க் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

34
ரியல்மி GT 8 Pro 200MP கேமரா

இந்த மொபைலின் முக்கிய ஆச்சரியம் 1/1.56 இன்ச் சென்சாருடன் வரும் 200MP டெலிஃபோட்டோ கேமரா. இது 3x ஆப்டிக்கல் ஜூம், 6x லாஸ்லெஸ் ஜூம் மற்றும் 12x ஹைப்ரிட் ஜூம் ஆகியவற்றை ஆதரிக்கும். கூடுதலாக 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் (116° FoV, f/2.0) வழங்கப்பட்டுள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கில் இந்த மொபைல் 4K 120fps Dolby Vision, 4K 10-bit லாக் மற்றும் 8K 30fps பதிவை மெயின் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ்களிலுமே ஆதரிக்கிறது.

44
ரியல்மி ப்ரோ கேமரா மொபைல்

சீன மாடலைப் போலவே, இந்தியாவிலும் GT 8 Pro மாற்றக்கூடிய பின்புற கேமரா வடிவமைப்புடன் வரும். இது Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மற்றும் HyperVision+ AI சிப் கொண்டது. Android 16 அடிப்படையிலான Realme UI 7 இயங்குதளத்துடன், 2K பிளாட் டிஸ்ப்ளேயும் வழங்கப்பட்டுள்ளதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 7,000mAh பெரிய பேட்டரியும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories