ரூ.12,000 பட்ஜெட்டில் கிடைக்கும் போக்கோ எம்6 ப்ளஸ் 5ஜி, 108எம்பி கேமரா, 16ஜிபி ரேம் மற்றும் 5ஜி ஆதரவுடன் வருகிறது. இந்த மொபைல், Snapdragon 4th Gen 2 செயலி மற்றும் 5030mAh பேட்டரி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
ரூ.12,000 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 5ஜி சப்போர்ட், 16ஜிபி ரேம் என சக்திவாய்ந்த ஸ்பெக்ஸ்களுடன் ஒரு ஸ்மார்ட்போன் தேடுகிறீர்களா? அப்படியானால் போக்கோ எம்6 ப்ளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) உங்கள் லிஸ்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். மலிவு விலையில் சிறந்த கேமரா, வேகமான பிராசசர், நீண்ட பேட்டரி-இவை மூன்றும் சேர்ந்து வரும் இந்த மொபைல் தற்போது Flipkart-ல் ஆஃபருடன் கிடைக்கிறது.
24
போக்கோ எம்6 ப்ளஸ் 5ஜி அம்சங்கள்
போக்கோ எம்6 ப்ளஸ் 5ஜி மொபைல் தற்போது 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.10,899 விலையில் விற்கப்படுகிறது. இதற்கு EMI வசதியும் உள்ளது. மாதம் ரூ.384 முதல் செலுத்த முடியும். குறைந்த விலையில் அதிக ஸ்பெக்ஸ் வேண்டுமென்றாலே இந்த மாடல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பட்ஜெட்டில் போக்கோ எம்6 ப்ளஸ் 5ஜி பல ஸ்மார்ட்போன்களுடன் கடுமையான போட்டி கொடுக்கிறது. அதில் OPPO K13x 5G, realme P3x 5G, vivo T4 Lite 5G, Motorola g35 5G போன்ற மாடல்களும் அடங்கும்.
34
போக்கோ எம்6 ப்ளஸ் கேமரா
ஆனால் 108MP கேமரா மற்றும் 16GB RAM (விர்ச்சுவல் RAM உடன்) வசதி இந்த Poco மாடலை மற்ற மொபைல்களில் வேறுபடுத்துகிறது. இந்த Poco M6 Plus 5G மொபைல் ஆனது 6.79 இன்ச் முழு HD+ டிஸ்பிளே உடன் வருகிறது. 120Hz அடாப்டிவ் புதுப்பிப்பு விகிதம் உள்ளது, அதனால் ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் மிகவும் ஸ்மூத் ஆக இருக்கும். டிஸ்பிளே பாதுகாப்பிற்கு Corning Gorilla Glass 3 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் Snapdragon 4th Gen 2 AE செயலி-ஐ கொண்டுள்ளது, இது தினசரி பயன்பாடு, ஆப்கள், கேமிங்கில் நல்ல செயல்திறன் வழங்கும்.
இந்த மாடலில் 8GB RAM + 8GB Virtual RAM என மொத்தம் 16GB வரை RAM கிடைக்கிறது. கேமராவில் 108MP பிரதான சென்சார் + 2MP மேக்ரோ சென்சார் என இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. செல்பிக்காக 13MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பயன்படுத்த 5030mAh பேட்டரி மற்றும் 33W வேகமாக சார்ஜிங் ஆதரவு உள்ளது. குறைந்த விலையில் அதிக அம்சங்கள் தேடும் பயனர்களுக்கு இந்த போக்கோ மொபைல் நல்ல தேர்வாக இருக்கும்.