Railway ரயில்வே அதிகாரிகள் பெயரில் நடக்கும் நூதன சைபர் மோசடி! ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரயில்வே வாரியம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.உடனே படிங்க!
நீங்கள் ஒரு ரயில்வே ஊழியராகவோ அல்லது ஓய்வு பெற்ற அதிகாரியாகவோ இருந்தால், உங்களுக்கு வரக்கூடிய அறிமுகமில்லாத அழைப்புகள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். சமீபகாலமாக மூத்த ரயில்வே அதிகாரிகள் பேசுவது போலக் கூறி, ஜூனியர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குத் தொலைபேசி அழைப்புகளும், வாட்ஸ்அப் (WhatsApp) குறுஞ்செய்திகளும் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றன.
'உங்கள் பிபிஓ (PPO) அப்டேட் செய்ய வேண்டும்', 'கேஒய்சி (KYC) சரிபார்ப்பு நிலுவையில் உள்ளது' அல்லது 'கூடுதல் ஓய்வூதியப் பலன்கள் வந்துள்ளது' என்பது போன்ற கவர்ச்சிகரமான காரணங்களைச் சொல்லி, மோசடி கும்பல் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்களை நூதனமாகத் திருட முயற்சிக்கிறது. பல ஊழியர்கள் இதை உண்மை என நம்பித் தங்கள் பணத்தை இழந்துள்ள சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24
ரயில்வே வாரியத்தின் கறார் உத்தரவு
இந்த மோசடிகள் குறித்து ரயில்வே வாரியம் தற்போது கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. "எந்தவொரு ரயில்வே அதிகாரியும் தொலைபேசி, எஸ்எம்எஸ் (SMS), வாட்ஸ்அப் அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக வங்கி விவரங்கள், ஓடிபி (OTP), பாஸ்வேர்டு அல்லது எந்தவொரு ரகசியத் தகவலையும் கேட்க மாட்டார்கள்" என வாரியம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக, சர்வீஸ் ரெக்கார்டுகளை (Service Records) அப்டேட் செய்வதற்காகவோ அல்லது பென்ஷன் விவரங்களைச் சரிபார்ப்பதற்காகவோ ரயில்வே நிர்வாகம் எந்தவொரு ஆன்லைன் லிங்க்கையும் (Link) அனுப்புவதில்லை. எனவே, மொபைலுக்கு வரும் எந்த லிங்க்கையும் நம்பி க்ளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
34
தற்காத்துக் கொள்வது எப்படி?
ஓய்வூதியதாரர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மோசடிக்காரர்களின் தந்திரங்கள் குறித்து குடும்ப உறுப்பினர்களிடமும் விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஒருவேளை உங்களுக்குச் சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் அழைப்போ அல்லது மெசேஜோ வந்தால், உடனடியாகத் காவல் துறையின் 'சைபர் செல்' (Cyber Cell) பிரிவுக்கும், உங்கள் சம்பந்தப்பட்ட நிர்வாக அலுவலகத்திற்கும் புகார் அளிக்க வேண்டும்.
சைபர் குற்றங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறது. சமீபத்தில் நடந்த இந்தியா ஏஐ உச்சிமாநாட்டில் (India AI Summit 2026) பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "தற்போதைய இணையப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள, ஒரு புதிய மற்றும் வலுவான சட்டக் கட்டமைப்பை (Legal Framework) உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் ஸ்மார்ட் ஆகிவிட்டன. எனவே, நமது விழிப்புணர்வே நமது பணத்துக்கான மிகப்பெரிய பாதுகாப்பு அரண்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.