QR Code Scam Alert: ஸ்கேன் பண்ணி பணம் அனுப்புறீங்களா? அக்கவுண்ட் காலி ஆகலாம்.. உஷார்!

Published : Sep 27, 2026, 07:38 AM IST

QR Code Scam Alert: கடைகளிலோ, ஆன்லைனிலோ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துகிறீர்களா? உங்கள் பணம் பறிப்போகும் ஆபத்து இருக்கிறது. இந்த மோசடியில் இருந்து தப்பிக்க 7 எளிய வழிகளை பார்ப்போம்.

PREV
14
QR கோடு ஸ்கேன் செய்து பணம் அனுப்புறீங்களா?

UPI, PhonePe மற்றும் GPay வந்த பிறகு, QR கோடு ஸ்கேன் செய்து பணம் அனுப்புவது நமக்கு ரொம்பவே பழக்கமாகிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லா இடங்களிலும் கியூஆர் கோடுதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதியைத்தான் மோசடி கும்பல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன.

மோசடி எப்படி நடக்கிறது?

கடைகளில் இருக்கும் உண்மையான QR கோடு மீது மோசடி நபர்கள் தங்களது போலி கியூஆர் கோட்டை ஒட்டிவிடுகிறார்கள். நீங்கள் அதை ஸ்கேன் செய்து பணம் அனுப்பினால், அந்தப் பணம் மோசடி நபரின் கணக்கிற்குச் சென்றுவிடும். பல நேரங்களில் பார்க்கிங் கட்டணம், மின்சாரப் பில் அல்லது பேஸ்புக்கில் மலிவு விலையில் பொருட்கள் விற்பதாகக் கூறி கியூஆர் கோடுகளை அனுப்புவார்கள்.

அதை ஸ்கேன் செய்தால் உங்கள் போனில் மால்வேர் வைரஸ் நுழைந்துவிடும் அல்லது பணம் பறிபோய்விடும். ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் கொள்ளுங்கள். பணம் பெறுவதற்கு எப்போதுமே கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. பணம் அனுப்ப மட்டுமே கியூஆர் கோடு பயன்படும்.

24
மோசடியிலிருந்து தப்பிக்க 7 சூப்பர் டிப்ஸ்

பணம் பெற ஸ்கேன் செய்ய வேண்டாம்

''பணம் அனுப்புகிறேன், இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்" என்று யாராவது சொன்னால், அது 100% மோசடி. UPI-ல் பணம் பெறுவதற்கு PIN எண் போடவோ, ஸ்கேன் செய்யவோ தேவையில்லை. அப்படி யாராவது கேட்டால் உடனே பிளாக் செய்துவிடுங்கள்.

ஸ்கேன் செய்த பிறகு பெயரைச் சரிபார்க்கவும்

கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகு, யாருடைய பெயர் காட்டுகிறது என்பதை கவனியுங்கள். கடையின் பெயரும் அதில் காட்டும் பெயரும் ஒன்றாக இருக்கிறதா? அறிமுகமில்லாத அல்லது தனிநபர் பெயர் காட்டினால், பணம் அனுப்ப வேண்டாம்.

சாலையில் இருக்கும் QR கோடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்

பார்க்கிங் மற்றும் மின் கம்பங்களில் "ஸ்கேன் செய்து பில் கட்டுங்கள்" என்று ஒட்டப்பட்டிருக்கும் QR கோடுகளை ஒருபோதும் ஸ்கேன் செய்யாதீர்கள். எப்போதும் அதிகாரப்பூர்வ செயலி (App) அல்லது வலைத்தளத்தை (Website) மட்டுமே பயன்படுத்துங்கள்.

34
கியூஆர் கோடு புகைப்படத்தை அனுப்ப வேண்டாம்

உங்களது UPI QR கோடு அல்லது கட்டண கியூஆர் கோடை முன்பின் தெரியாத நபர்களுக்கு அனுப்பாதீர்கள். இதனால் உங்கள் வங்கி விவரங்கள் திருடப்படலாம்.

சவுண்ட் பாக்ஸ் அல்லது லைவ் கியூஆர் பயன்படுத்தவும்

பல கடைகளில் அச்சிடப்பட்ட (Printed) QR கோடு இருக்கும். அதை எளிதாக மாற்றிவிடலாம். முடிந்தவரை கடைக்காரரின் போனில் உள்ள லைவ் கியூஆர் கோடு அல்லது சவுண்ட் பாக்ஸ் மூலம் பணம் செலுத்துங்கள்.

சிறிய தொகையை அனுப்பிச் சோதிக்கவும்

பெரிய தொகையை அனுப்புவதற்கு முன்பு, 1 ரூபாய் மட்டும் அனுப்பி சரியான நபருக்குத்தான் பணம் செல்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

44
பணம் போனால் என்ன செய்வது?

ஒருவேளை நீங்கள் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால், உடனே 1930 (சைபர் கிரைம் உதவி எண்) என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது http://www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளியுங்கள். 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால், உங்கள் பணம் திரும்பக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

கியூஆர் கோடு என்பது நமது வசதிக்காகத்தான், ஆபத்திற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொஞ்சம் கவனமாக இருந்தால், உங்களது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பாதுகாப்பாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories