சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான போகோ, இந்திய சந்தையில் புதிய டேப்பை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த டேப் போக்கோ பேட் 5ஜி என்ற பெயரில் கொண்டு வரப்படுகிறது. குறைந்த விலையில் நல்ல வசதிகளுடன் கூடிய இந்த டேப் ஆகஸ்ட் 23ம் தேதி இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அம்சங்களைப் பொறுத்த வரையில், Poco Pad 5G Tab 12.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இந்தத் திரையில் 120hz புதுப்பிப்பு விகிதம் உள்ளது.