Photography Day: மொபைல் கேமராவில் சூப்பரா போட்டோ எடுக்கணுமா? எந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

First Published | Aug 19, 2024, 6:16 PM IST

மொபைல் கேமராவில் புகைப்படம் எடுப்பது தனி கலை. ஒரு படம் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இந்த உலக புகைப்பட தினத்தில் ஸ்மார்ட்போனில் சிறந்த படங்களை எடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

World Photography Day Tips

ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் தாங்கள் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்து புகைப்பட தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

Mobile Photographer

மொபைல் கேமராவில் புகைப்படம் எடுப்பது ஒரு தனி கலை. ஒரே ஒரு புகைப்படம் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்த உலக புகைப்பட தினத்தில் உங்கள் ஸ்மார்ட்போனில் சிறந்த புகைப்படங்களை எடுக்க சில டிப்ஸைப் பார்க்கலாம்.

Latest Videos


Smartphone Camera Tips

கேமரா லென்ஸ் மீது அழுக்கு மற்றும் கறை படியாமல் பார்த்துகொள்ளவும். கேமரா லென்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்யவும். போட்டோ எடுப்பதற்கு முன் கைரேகை, கறைகளைத் துடைக்க மென்மையான மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தவும்.

Better Photos in Smartphone

போட்டோ எடுக்க விரும்பும் சப்ஜெக்டை ஒரு குறிப்பிட்ட பகுதியில் focus செய்யவும். அதற்கு மொபைல் திரையில் ஃபோக்கஸ் தேவையான இடத்தில் டச் செய்ய வேண்டும். இது உங்கள் சம்ஜெக்டை கூர்மையாக்கிக் காட்டும்.

Mobile Photograhy

கிரிட்லைன்களை பயன்படுத்தி படம் எடுப்பது அழகிய படங்களை எடுக்க சிறந்த வழி. உங்கள் கேமரா செட்டிங்கில் கிரிட் லைன் ஆப்ஷனை ஆன் செய்துகொள்ளவும். கிரிட்லைனின் உதவியுடன் ஆஃப்-சென்டர் ஷாட்களை எடுத்துப் பார்க்கவும். இது புகைப்படக் கலையில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு வழிமுறை.

Photograhy Ideas

மொபைல் கேமராவில் ஆட்டோமேட்டிக் செயல்முறை இருந்தாலும், சில நேரங்களில் அது சரியாக அமையாமல் போகலாம். அப்போது திரையின் பிரகாசத்தை தேவையான அளவு மாற்றலாம். இதன் மூலம் மங்கலான வெளிச்சத்திலும் நல்ல படங்களை கிளிக் செய்யலாம்.

Smartphone Photograhy

பெரும்பாலும் இயற்கை ஒளியைப் பயன்படுத்த வேண்டும். மொபைலில் உள்ள ஃபிளாஷை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இயற்கை ஒளியில் கிளிக் செய்யும்போது சிறப்பான படங்களை எடுக்க முடியும்.

Smartphone Photography Dos and Don'ts

ஃபோனில் டெலிஃபோட்டோ சென்சார் இல்லை என்றால், Zoom செய்வதைத் தவிர்க்கவும். ஸ்மார்ட்போன் கேமராவில் ஜூம் செய்வது படத்தின் குவாலிட்டியைக் குறைக்கும். ஜூம் செய்வதை விட நெருக்கமாகச் சென்று போட்டோ எடுக்கலாம்.

click me!