போக்கோ நிறுவனம் இந்தியாவில் புதிய Poco M7 Plus 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 7,000mAh பேட்டரி, Snapdragon 6s Gen 3 பிராசசர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளும் உண்டு.
போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Poco M7 Plus 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 7,000mAh பெரிய பேட்டரி, Snapdragon 6s Gen 3 பிராசசர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் இந்த மொபைல், ரிவர்ஸ் சார்ஜிங் மூலம் பிற சாதனங்களையும் சார்ஜ் செய்ய முடியும். போக்கோவின் கூற்றுப்படி, இந்த விலையில் கிடைக்கும் மிகப் பெரிய பேட்டரி கொண்ட மாடல் இதுதான்.
25
விலை மற்றும் விற்பனை விவரம்
போக்கோ எம்7 ப்ளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) இன் 6GB RAM + 128GB சேமிப்பு மாடல் ரூ.13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடல் ரூ.14,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 19 மதியம் 12 மணி முதல் Flipkart-ல் விற்பனை தொடங்குகிறது. Aqua Blue, Carbon Black, Chrome Silver ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும். HDFC, SBI, ICICI வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடி, அல்லது பழைய மொபைலை மாற்றினால் கூடுதல் ரூ.1,000 தள்ளுபடி என தொடக்க சலுகைகள் வழங்கப்படுகின்றன.
35
டிஸ்ப்ளே அம்சங்கள்
இந்த மொபைலில் 6.9 அங்குல Full-HD+ டிஸ்ப்ளே, அதிகபட்சம் 144Hz ரிஃப்ரெஷ் ரேட், 288Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. அதிகபட்ச பிரைட்னஸ் 850 நிட்ஸ் ஆகும். கண்களுக்கு கேடு குறைக்கும் TÜV Rheinland சான்றிதழ்கள், ப்ளூ லைட் குறைப்பு, பிளிக்கர்-ஃப்ரீ மற்றும் சர்க்கேடியன் ஸ்டாண்டர்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா மற்றும் இரண்டாவது சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்னால் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இரு கேமராக்களும் 1080p 30fps வரை வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டவை.
55
பிராசசர் மற்றும் மென்பொருள்
Snapdragon 6s Gen 3 சிப் செட், அதிகபட்சம் 8GB LPDDR4x RAM (விர்ச்சுவல் RAM மூலம் 16GB வரை விரிவாக்கம் செய்யலாம்) உள்ளது. 128GB UFS 2.2 சேமிப்பு, Android 15 அடிப்படையிலான HyperOS 2.0 ஓஎஸ். இரண்டு ஆண்டுகள் மேஜர் அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 5G, 4G, Wi-Fi, Bluetooth 5.1, GPS, USB Type-C போன்ற இணைப்பு வசதிகள் உள்ளன. பக்கவாட்டில் கைரேகை சென்சார், IP64 துகள்கள் மற்றும் தண்ணீர் தெளிப்பு எதிர்ப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.