சீன ஸ்மார்ட்போன் பிராண்டான போக்கோ, விரைவில் புதிய F8 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன. போக்கோ F8 Pro மற்றும் F8 Ultra பல சான்றிதழ் தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, கீக்பெஞ்சில் இடம்பெற்றுள்ள F8 Ultra, கடந்த மாதம் சீனாவில் வெளியான Redmi K90 Pro Max மாடலின் ரீபிராண்டட் பதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 Elite Gen 5
25102PCBEG என்ற மாடல் எண்ணுடன் கீக்பெஞ்சில் பட்டியலான F8 Ultra, ஸ்னாப்டிராகன் 8 Elite Gen 5 சிப்செட்டில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் 16GB RAM கொண்டதாகவும், Android 16 அடிப்படையிலான HyperOS 3-ல் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. Redmi K90 Pro Max போன்ற அம்சங்கள் இதில் கிடைக்கலாம். ஆனால் பேட்டரி திறன் மட்டும் சிறிய மாற்றத்துடன் வரும். K90 Pro Max-l 7,500mAh இருந்தாலும், போக்கோவின் புதிய மாடல் 6,500mAh பேட்டரியுடன் வரலாம்.