TRAI New Rules
நவம்பர் 1 முதல் OTP SMS வருவது நிறுத்தப்படுமா? TRAI இன் புதிய விதிகள் பின்பற்றப்பட்டால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக ரீதியாக SMS அனுப்ப முடியாது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) புதிய விதிகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.
இந்த விதியின்படி, வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் இருந்து வரும் பரிவர்த்தனை மற்றும் சேவை எஸ்எம்எஸ்களைக் கண்டறிவது கட்டாயமாகும், இதற்கு முன்பு விலக்கு அளிக்கப்பட்டது. எந்த செய்தியிலும் குறுக்கீடு ஏற்பட்டால், அந்த செய்தி ஃபில்டர் செய்யப்படும்..
TRAI New Rules
பல முக்கிய நிறுவனங்கள் (PEs) மற்றும் டெலிமார்க்கெட்டர்கள் இந்த விதிகளுக்கு இணங்க இன்னும் தயாராக இல்லை, இது OTP மற்றும் பிற தேவையான செய்திகளை வழங்குவதைத் தடுக்கலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) இந்த பிரச்சினை குறித்து TRAI க்கு கோரிக்கை விடுத்தது. இந்த புதிய விதியை அமல்படுத்தும் தேதியை நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த சங்கம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடா-ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கியது. ட்ரேஸ் செய்ய முடியாத செய்திகளை வாடிக்கையாளர்களை சென்றடைய டெலிகாம் நிறுவனங்கள் அனுமதிக்கக் கூடாது என்று TRAI உத்தரவிட்டுள்ளது.
TRAI New Rules
டெலிகாம் ஆபரேட்டர்கள், டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் PEகள் தேவையான தொழில்நுட்ப தீர்வுகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், OTP மற்றும் பிற முக்கிய தகவல்கள் அடங்கிய செய்திகள் மக்களைச் சென்றடையாது.
இந்தியாவில் தினசரி சுமார் 1.5 - 1.7 பில்லியன் வணிகச் செய்திகள் அனுப்பப்படுவதாக நம்பப்படுகிறது, எனவே இந்த விதிகளின் காரணமாக, செய்திகளை வழங்குவதற்கு அதிக நேரம் ஆகலாம் அல்லது அவை தாமதமாக வரலாம். இந்த விதிகளை நவம்பர் 1-ம் தேதி முதல் ‘லாகர் மோடில்’ அமல்படுத்த வேண்டும் என்றும், தவறான சிக்னல்கள் அனுப்பப்பட்டால், அவற்றைக் குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.
டிசம்பர் 1-ம் தேதிக்குள் விளம்பரத் தொகுதிகள் விநியோகம் ‘பிளாக்கிங் முறையில்’ கொண்டுவரப்படும் என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.