ஒப்போ வாட்ச் 5 ஸ்மார்ட்வாட்சில் 390×450 பிக்சல் ரெசல்யூஷன், 322ppi பிக்சல் அடர்த்தி மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடில் அதிகபட்சமாக 3,000 நிட்ஸ் (3,000 nits) பிரைட்னஸ் கொண்ட 1.85 இன்ச் AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பிற்காக GG5 கிளாஸ் புரொடெக் (GG5 Glass Protection) கொடுக்கப்பட்டுள்ளது. ColorOS Watch 17 இயங்குதளத்தில் செயல்படும் இந்த வாட்ச், ஆண்ட்ராய்டு 10 (Android 10) மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளையும், iOS 16 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளையும் சப்போர்ட் செய்கிறது. புளூடூத் 5.2 (Bluetooth 5.2), NFC பேமெண்ட் வசதி, அக்சஸ் கார்டு சப்போர்ட் மற்றும் ஒப்போவின் சியாபு அசிஸ்டென்ட் (Xiaobu Assistant) ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.
தொடர்ச்சியான இதயத் துடிப்பு & ரத்த ஆக்சிஜன் (SpO2) கண்காணிப்பு, சீரற்ற இதயத் துடிப்புக்கான எச்சரிக்கை, மணிக்கட்டு வெப்பநிலை (Wrist Temperature) கண்காணிப்பு மற்றும் மாதவிடாய் சுழற்சி மேலாண்மை போன்ற ஆரோக்கிய அம்சங்கள் இதில் உள்ளன. மேலும், நாள் முழுவதும் தூங்கும் முறைகளைக் கண்காணித்து, தூக்கத்தின் தரம் குறித்த அறிக்கையையும், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் (Apnoea Risk Assessments) குறித்த மதிப்பீட்டையும் இது வழங்குகிறது.
ஓட்டம் (Running), நீச்சல் (Swimming), சைக்கிள் ஓட்டுதல் (Cycling) மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை இது சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக, உடல் கொழுப்பைக் குறைக்க உதவும் பிரத்யேக ‘சூப்பர் ஃபேட் பர்னிங் மோட்’ (Super Fat Burning Mode) இதில் இடம்பெற்றுள்ளது. ஓடுவது, நடப்பது மற்றும் சைக்கிள் ஓட்டுவதை இது தானாகவே கண்டறியும் திறன் கொண்டது; அத்துடன் உடற்பயிற்சி திறன், ஃபிட்னஸ் நிலை மற்றும் உடல் மீள்வதற்கான நேரம் (Recovery Time) குறித்த முழுமையான பகுப்பாய்வையும் வழங்குகிறது.