பவர்ஃபுல் பேட்டரி.. மிரட்டலான சிப்செட்.. கெத்தாக களமிறங்கும் Oppo Reno 16 Pro

Published : Apr 30, 2026, 10:32 PM IST

ஓப்போ நிறுவனம் அடுத்த தலைமுறை மாடலான Reno 16 Pro-வை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பம்சஙகள் இருக்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
12
Oppo Reno 16 Pro

ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள Oppo, தனது அடுத்த தலைமுறை மாடலான Reno 16 Pro-வை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. Reno 15 Pro-வின் அடுத்த வெர்ஷனாக வரவிருக்கும் இந்த போன் பற்றிய தகவல்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து Oppo நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை என்றாலும், லீக் ஆன தகவல்கள் போனின் வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த ஒரு தெளிவைக் கொடுக்கின்றன.

என்னென்ன சிறப்பம்சங்கள்?

பிரபல டெக் டிப்ஸ்டரான யோகேஷ் ப்ரார் Oppo Reno 16 Pro இந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. இதன் முந்தைய மாடலான Reno 15 சீரிஸ், கடந்த நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனால், இவ்வளவு சீக்கிரமாக ஒரு அப்டேட் வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, குளோபல் வெர்ஷனில் 6.32 இன்ச் OLED ஸ்கிரீன் தொடரும் எனத் தெரிகிறது. ஆனால், Reno 15 Pro-வில் 6.78 இன்ச் பெரிய டிஸ்பிளே இருந்தது குறிப்பிடத்தக்கது. கேமரா பிரிவில், 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போட்டோகிராஃபியில் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் என நம்பலாம்.

22
பேட்டரியிலும் ஒரு அப்கிரேடு

இந்த புதிய போனின் டிசைனைப் பார்த்தால், கிளாஸ் மற்றும் அலுமினியம் கலந்த ஒரு பிரீமியம் ஃபினிஷ் இதில் இருக்கும். மேலும், சமீபத்திய OnePlus போன்களில் இருப்பது போல, ஒரு 'ஆக்‌ஷன் பட்டன்' இதில் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. பேட்டரியிலும் ஒரு சின்ன அப்கிரேடு இருக்கும் எனத் தெரிகிறது. Reno 15 Pro-வில் இருந்த 6500mAh பேட்டரியை விட அதிக திறன் கொண்ட பேட்டரியை இதில் எதிர்பார்க்கலாம்.

ஸ்டோரேஜ் மற்றும் ரேம் ஆப்ஷன்கள் எப்படி?

ஸ்டோரேஜ் மற்றும் ரேம் ஆப்ஷன்களும் தாராளமாக இருக்கும். 12GB முதல் 16GB வரை ரேம் மற்றும் 256GB முதல் 1TB வரை ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு, பச்சை, வயலட் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த போன் வெளியாக வாய்ப்புள்ளது. செயல்திறனுக்காக, MediaTek Dimensity 9400+ அல்லது Dimensity 9500s சிப்செட்களில் ஒன்று பயன்படுத்தப்படலாம். மேலும், Reno 16, Reno 16 Pro Mini, மற்றும் Reno 16 Pro Max போன்ற மற்ற மாடல்களும் இதே நேரத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. Oppo-வின் இந்த புதிய மாடல் சந்தைக்கு வரும்போது, பிரீமியம் செக்மென்ட்டில் போட்டியை நிச்சயம் கடுமையாக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories