ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவின் சக்தியுடன் இசை உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கத் தயாராக உள்ளது. ஓபன்ஏஐ நிறுவனம் டெக்ஸ்ட் மற்றும் ஆடியோ உள்ளீடுகளிலிருந்து நேரடியாக இசையை உருவாக்கும் ஒரு மியூசிக் ஜெனரேஷன் கருவியை உருவாக்குகிறது. இதன் மூலம், ஒரு பயனர் இசையமைப்பாளரின் உதவியின்றி வீடியோவிற்கான பின்னணி இசை உருவாக்கலாம் அல்லது ஒரு பாடலுக்கான கிட்டார் டியூன் போன்றது இசை கூறுகளைச் சேர்க்கலாம்.