ஒண்ணா ரெண்டா... எல்லாமே கம்மி விலையில்! தெறிக்க விடும் ஒன்பிளஸ் தீபாவளி ஆஃபர்!

First Published | Oct 8, 2024, 11:15 AM IST

தீபாவளிக்கு முன்னதாக, OnePlus அதன் தயாரிப்புகள் மீது பண்டிகைக் கால சிறப்புச் சலுகைகளை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டேப்லெட், மற்றும் ஆடியோ டிவைஸ்களுக்கு அட்டகாசமான ஆஃபர் கிடைக்கும்.

OnePlus festive offer for Diwali 2024

தீபாவளிக்கு முன்னதாக, ஒன்பிளஸ் அதன் தயாரிப்புகள் மீது பண்டிகைக் கால சிறப்புச் சலுகைகளை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், டேப்லெட், மற்றும் ஆடியோ டிவைஸ்களுக்கு அட்டகாசமான ஆஃபர் கிடைக்கும்.

26 செப்டம்பர் 2024 முதல் தொடங்கிய இந்த தள்ளுபடி விற்பனை குறுகிய காலத்துக்கு மட்டுமே. OnePlus இணையதளத்திலும் அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களிலும் ஒன்பிளஸ் தயாரிப்புகளுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். ரீடெய்ல் கடைகளிலும்  இதே சலுகையுடன் வாங்கலாம்.

OnePlus 12 Series

OnePlus 12 சீரிஸ், Snapdragon 8 Gen 3 மொபைல் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, 2K 120Hz டிஸ்ப்ளே மற்றும் வேகமான சார்ஜிங் திறன்களுடன், OnePlus 12 உயர் செயல்திறன் கொண்ட மொபைலாக உள்ளது. OnePlus 12ஐ வாங்குபவர்கள் OnePlus Buds Pro 2 ஐ இலவசமாகப் பெறலாம். வங்கிச் சலுகைகள் மற்றும் ஆறு மாத வட்டியில்லா EMI மூலம் ரூ.7,000 வரை கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். ரூ.2,000 க்கு சிறப்புக் கூப்பனும் கிடைக்கும்.

OnePlus 12R கேமிங் ஆர்வலர்களை இலக்காகக் கொண்ட ஸ்மார்ட்போன். இது 6.78-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளேயுடன் நீண்ட நேரம் கேம் விளையாடும்போது மொபைல் சூடாகாமல் இருக்க கூலிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. மேலும், ரூ.3,000 வங்கித் தள்ளுபடி மற்றும் ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லா EMI ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்.

Tap to resize

OnePlus Nord Series

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் 5,500mAh பேட்டரி, Snapdragon 7+ Gen 3 சிப்செட் மற்றும் 100W SUPERVOOC சார்ஜிங் போன்ற அம்சங்களைக் கொண்டது. சில வங்கி கார்டுகள் மூலம் ரூ.2,000 வரை சிறப்புத் தள்ளுபடியும் பெறலாம். குறிப்பிட்ட வேரியண்ட்களில் ரூ.2,000 முதல் ரூ.3,000 கூடுதல் விலைக் குறைப்பும் உள்ளது. OnePlus அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Nord 4 ஐ வாங்கும் மாணவர்களுக்கு Nord Buds வாங்க சிறப்பு தள்ளுபடி கிடைக்கும்.

AMOLED டிஸ்ப்ளே கொண்ட OnePlus Nord CE4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 Gen 3 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதை வாங்கும்போது ஒரு ஜோடி OnePlus Nord Buds 2R இலவசமாகப் பெறலாம். ரூ.1,500 விலை குறைப்புடன் மேலும் 1,500 ரூபாய் வங்கி தள்ளுபடியும் கிடைக்கும்.

OnePlus Open

ஒன்பிளஸ் அறிமுகம் செய்த முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் OnePlus Open. இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. சில வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ.20,000 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம். OnePlus Watch 2 இத்துடன் இலவசமாகத் தரப்படுகிறது. ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ரூ.5,000 சிறப்புத் தள்ளுபடி உட்பட கூடுதல் பலன்களைப் பெறலாம்.

OnePlus IoT

OnePlus Pad 2 & Pad Go: இரண்டு டேப்லெட்டுகளும் 3K டிஸ்ப்ளே, வேகமாக சார்ஜிங் போன்ற அம்சங்கள் கொண்டவை. ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் மூலம் ரூ.5,000 சேமிக்கலாம். ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

OnePlus Watch 2 & Watch 2R: ஒன்பிளஸ் வாட்ச்கள் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் குறுகிய கால விலைக் குறைப்புடன் கிடைக்கின்றன. ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

OnePlus Audio Devices

OnePlus Buds 3 மற்றும் OnePlus Buds Pro 3 உள்ளிட்ட ஆடியோ தயாரிப்புகளுக்கும் தீபாவளிச் சலுகைகள் உண்டு. OnePlus Buds Pro 3 வாங்கும்போது ரூ.1,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கூடுதலாக சேமிக்க முடியும். Nord Buds 3 மற்றும் Nord Buds 3 Pro ஆகியவற்றை சிறப்புச் சலுகைகளுடன் வாங்கலாம்.

OnePlus Festive Sale 2024

இந்த சலுகைகள் அனைத்தும் 26 செப்டம்பர் 2024 முதல் OnePlus இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அமேசான் (Amazon) தளத்திலும் கிடைக்க்கின்றன. ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) மற்றும் குரோமா (Croma) போன்ற ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இதே சலுகைகளைப் பெற முடியும். ஒன்பிளஸ் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் சில கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம்.

Latest Videos

click me!