40,000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஆல்ரவுண்ட் லேப்டாப்! எந்தத் தேவைக்கும் பயன்படுத்தலாம்!

First Published | Oct 6, 2024, 2:03 PM IST

குறைவான பட்ஜெட்டில், லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. டெல் முதல் ஹெச்பி வரை, ஹானர் மற்றும் லெனோவா வரை சூப்பர் லேப்டாப்களை இந்த 40,000 ரூபாய் பட்ஜெட்டுக்குள் வாங்கிவிடலாம்.

40,000 ரூபாய் பட்ஜெட்டில், லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கின்றன. எல்லா நிறுவனங்களும் முதல் லேப்டாப் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை டார்கெட் செய்து பட்ஜெட் லேப்டாப்களைக் கொண்டுவந்துள்ளன. இவற்றில் உள்ள அம்சலங்கள் ஒரு லட்சம் ரூபாய் லேப்டாப்களுடன் போட்டி போடுகின்றன. டெல் முதல் ஹெச்பி வரை, ஹானர் மற்றும் லெனோவா வரை சூப்பர் லேப்டாப்களை இந்த 40,000 ரூபாய் பட்ஜெட்டுக்குள் வாங்கிவிடலாம்.

இந்த HP 15s லேப்டாப் AMD Ryzen 5 5500U செயலியுடன் மல்டி டாஸ்கிங் திறனைப் பெற்றுள்ளது. இதை இப்போது ரூ.39,990 வாங்கலாம். இந்த ஹெச்பி லேப்டாப் விண்டோஸ் 11 ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வேலை செய்கிறது. AMD Radeon அம்சத்துடன் வரும் இந்த லேப்டாப், மேம்பட்ட கிராபிக்ஸ் கொண்டது. இந்த லேப்டாப்பில் 720p HD கேமராவும் உள்ளது. 16ஜிபி DDR4 ரேம் மற்றும் 512GB SSD மெமரி இருக்கிறது.

மாணவர்கள் முதல் கேம் பிரியர்கள் வரை பயன்படுத்தலாம். வேலை நிமித்தமாகவும் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும். இந்த லேப்டாப் 15.6 இன்ச் ஸ்கிரீனுடன் மைக்ரோ-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டது. 41Wh பேட்டரி கொண்ட இந்த லேப்டாப்பை 45 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம்.

Tap to resize

15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்ட இந்த லைட் வெயிட் லெனோவா லேப்டாப் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி மெமரியுடன் கிடைக்கும். இதில் கடினமான வேலைகளைக்கூட எளிதாகச் செய்யலாம். இந்த லெனோவா லேப்டாப் மல்டி டாஸ்கிங் வேலைகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

இந்த லேப்டாப்பில் AMD கிராபிக்ஸ், Windows 11 மற்றும் Office 2021 ஆகிய வசதிகளைப் பெறலாம். இந்த லேப்டாப் விலை இப்போது ரூ.35,490 ஆயிரம் மட்டுமே. HD கேமராவுடன் வரும் இந்த மல்டி டாஸ்கிங் லெனோவா லேப்டாப் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் கேமர்களின் முதல் தேர்வாக உள்ளது. 2x 1.5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், HD டால்பி ஆடியோ, இரட்டை வரிசை மைக்ரோஃபோன் ஆகியவையும் உள்ளன. இந்த லேப்டாப்பில் 9 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும். ஒரு மணிநேரத்தில் 80% வரை சார்ஜ் செய்யலாம்.

குறைந்த எடை கொண்ட இந்த ஏசர் லேப்டாப்பை எங்கு வேண்டுமானாலும் ஈசியாக எடுத்துச் செல்லலாம். இன்டெல் i5 பிராசஸருடன் கூடிய இந்த லேப்டாப்பை கேமிங்க, அலுவலக வேலைகள், கல்லூரி மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். இந்த பிரீமியம் ஏசர் லேப்டாப்பில் விண்டோஸ் 11 ஹோம் கிடைக்கும்.

ஃபுல் எச்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த லேப்டாப் மெட்டல் பாடி கட்டமைப்புடன் வருவதால், எந்த பதற்றமும் இல்லாமல் எங்கும் எடுத்துச் செல்லலாம். இந்த ஏசர் லேப்டாப்பில் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி SSD மெமரி கிடைக்கிறது.

Wi-Fi முதல் புளூடூத், HDMI வரையிலான இந்த ஏசர் லேப்டாப்பை ரூ.29,990 ஆயிரத்தில் வாங்கலாம். டர்போ பூஸ்ட் தொழில்நுட்பத்துடன் வரும் இந்த சிறந்த லேப்டாப் அன்றாட வேலைகளை மிக விரைவாக முடிக்க உதவும்.

டெல் நின்றுவனத்தின் இந்த லேப்டாப் i3 பிராசஸரைக் கொண்டது. மாணவராக இருந்தால், ரூ.40000க்குள் சிறந்த லேப்டாப் வாங்க இதைத் தேர்வு செய்யலாம். இது ரூ.36,990 விலையில் கிடைக்கிறது. இந்த டெல் லேப்டாப் குறைந்த எடை கொண்டது. இதன் காரணமாக எங்கு வேண்டுமானாலும் ஈசியாக எடுத்துச் செல்லலாம். FHD IPS டிஸ்ப்ளேவுடன், விண்டோஸ் 11, மைக்ரோசாப்ட் ஆபிஸ், McAfee ஆகியவையும் இந்த லாப்டாப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்.

15.6 இன்ச் பெரிய திரையுடன் இந்த டெல் லேப்டாப்பை அலுவலக வேலை முதல் கேமிங் வரை அனைத்திற்கும் பயன்படுத்தலாம். வைஃபை 6 வயர்லெஸ் லேன் மற்றும் புளூடூத் இணைப்பும் இந்த டெல் லேப்டாப்பில் இருக்கிறது.

இந்த ஹானர் லேப்டாப் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி PCIe SSD மெமரியை உள்ளடக்கியது. விண்டோஸ் 11 இல் இயங்கும் இந்த லேப்டாப்பில் முழு அளவிலான நம்பர் கீ கொண்ட கீபோர்டு உள்ளது. 1.68Kg எடை இருக்கும் இந்த லேப்டாப் 720P HD வெப்கேம் கொண்டது.

பெரிய 16 இன்ச் திரையுடன் இருக்கிறது. இந்த லேப்டாப் 65W டைப்-சி பவர் அடாப்டர் கொண்டது. இதன் எடை 200 கிராம் மட்டுமே. பவர் அடாப்டர் மல்டி டிவைஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. MagicBook TÜV Rhineland லோ ப்ளூ லைட் சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் இந்த ஹானர் லேப்டாப் எல்லா நேரங்களிலும் கண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கிறது. இந்த லேப்டாப்பை ரூ.39,990 விலையில் வாங்கலாம்.

Latest Videos

click me!