ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஒன்பிளஸ் 15T போனை 2026-ல் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த போன் குவால்காமின் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், மிகப்பெரிய 7,000mAh பேட்டரியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன ஸ்மார்ட்போன் சந்தையில் பெயர் பெற்ற ஒன்பிளஸ் நிறுவனம், தனது அடுத்த தலைமுறை லாக்ஷிப் தொடரில் ஒரு புதிய காம்பாக்ட் போனை கொண்டு வரத் தயாராகி வருகிறது. ஒன்பிளஸ் 15 தொடரின் ஒரு பகுதியாக உருவாகும் ஒன்பிளஸ் 15T, சக்திவாய்ந்த ஸ்பெக்ஸுடன் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் மற்றும் பெரிய 7,000mAh பேட்டரியுடன் இந்த போன் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவில் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போனின் சீன மாடலில் வழங்கப்படும் அம்சங்களே இந்திய சந்தையிலும் பெரும்பாலும் தொடரும் என கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அறிமுகமாகும் போது, பெயர் ஒன்பிளஸ் 15S என மாற்றப்படலாம் என்ற தகவலும் உலாவுகிறது. இதற்கு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் அளிக்கவில்லை. வடிவமைப்பில், 6.3 இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற ஹை-எண்ட் அம்சங்கள் வழங்கப்படலாம்.
22
ஒன்பிளஸ் காம்பாக்ட் ஃபிளாக்ஷிப்
மேலும் இதில் பெரிய பேட்டரியை பொருத்துவது ஒன்பிளஸ் 15T-யின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கலாம். மெட்டல் பிரேம், டிஸ்ப்ளே கீழ் 3D அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் ஆகியவை பாதுகாப்பு மற்றும் பிரீமியம் உணர்வை அதிகரிக்கும். சக்திவாய்ந்த சிப்செட் காரணமாக, கேமிங் மற்றும் ஹெவி மல்டிடாஸ்கிங் அனுபவமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரா அம்சங்களில், 50MP பிரதான சென்சார் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு வழங்கப்படலாம். அதிக கேமரா எண்ணிக்கையை விட, ஆப்டிகல் ஜூம் தரத்தில் ஒன்பிளஸ் கவனம் செலுத்துகிறது. மேலும், மேக்னடிக் ஸ்னாப்-ஆன் கேஸ் போன்ற புதிய ஆக்சஸரீஸ் முயற்சிகளும் இருக்கலாம். வெள்ளை மற்றும் கிரே நிறங்களில் இந்த போன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.