ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் போனான ஒன்பிளஸ் 15-ஐ வெளியிட உள்ளது. இந்த போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், 7,000mAh பேட்டரி மற்றும் 50MP டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது.
ஒன்பிளஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் போன் ஒன்பிளஸ் 15-ஐ அக்டோபர் 27 அன்று சீனாவில் வெளியிடுகிறது. இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு இந்த போன் அறிமுகமாகும்.
25
ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் வரும் ஒன்பிளஸ் 15
ஒன்பிளஸ் 15, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 செயலியைக் கொண்டுள்ளது. இது 4.6GHz உச்ச கிளாக் வேகத்தை வழங்குகிறது. முந்தைய மாடலை விட 20% அதிக செயல்திறன் கொண்டது.
35
ஒன்பிளஸ் 15 வேரியண்ட்
ஒன்பிளஸ் 15, 6.82-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது ஒரு சிறப்பு 'சாண்ட் ஸ்டார்ம்' வேரியண்டிலும் கிடைக்கும்.