வெறும் ரூ.5,199-க்கு நோக்கியா 4ஜி ஃபிளிப் போன்: டூயல் டிஸ்பிளே, அவசர SOS பட்டன் உடன் அசத்தும் நோக்கியா 2660!

Published : Nov 12, 2026, 08:51 PM IST

எளிமையான மொபைல் போன்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக நோக்கியா நிறுவனம் தனது ‘நோக்கியா 2660 ஃபிளிப் 4ஜி’ (Nokia 2660 Flip 4G) மாடலை இந்தியச் சந்தையில் பட்டியலிட்டுள்ளது.

PREV
15
ரூ.5,199 விலையில் நோக்கியா ஃபிளிப் போன்

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எளிமையான மொபைல் போன்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக நோக்கியா நிறுவனம் தனது கிளாசிக் ஃபிளிப் வகை மொபைலான ‘நோக்கியா 2660 ஃபிளிப் 4ஜி’ (Nokia 2660 Flip 4G) மாடலை இந்தியச் சந்தையில் பட்டியலிட்டுள்ளது. அழைப்புகள் மற்றும் மெசேஜ்ஸ் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும் மொபைல் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த மாற்றுத் தேர்வாக அமைந்துள்ளது.

25
விலை மற்றும் கிடைக்கும் விவரம்

எச்.எம்.டி (HMD) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில், இந்த மொபைலின் கருப்பு நிற மாடல் ரூ.5,199 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அசல் அதிகபட்ச விற்பனை விலை (MRP) ரூ.5,899 ஆகும்; அதாவது ரூ.700 தள்ளுபடி விலையில் இது விற்பனைக்கு வந்துள்ளது. அதிக செயலிகள் மற்றும் இணைய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படைத் தொடர்புத் தேவைகளுக்கு ஏற்ற மொபைலைத் தேடுபவர்களைக் கருத்தில் கொண்டு இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

35
டூயல் டிஸ்பிளே மற்றும் கிளாசிக் வடிவமைப்பு

இதில் 2.8 இன்ச் பிரதான உட்புற டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும், போனைத் திறக்காமலேயே நேரம் மற்றும் அழைப்பு தொடர்பான விவரங்களைப் பார்ப்பதற்கு 1.77 அங்குல வெளிப்புறத் திரையும் இடம்பெற்றுள்ளது. போன் மூடிய நிலையில் இருக்கும்போதும் வெளிப்புறத் திரையைப் பயன்படுத்தி அழைப்பாளர் (Caller) விவரங்களை எளிதாக அறிந்துகொள்ள முடியும். வழக்கமான பட்டன் மொபைல்களிலிருந்து மாறுபட்டு, பழைய கால ஃபிளிப் போன்களின் வடிவமைப்பை விரும்புவோருக்கு இது கூடுதல் ஈர்ப்பாக இருக்கும்.

45
பேட்டரி, சேமிப்புத் திறன் & பொழுதுபோக்கு அம்சங்கள்

Nokia 2660 Flip 4G மொபைலில் 48MB RAM மற்றும் 128MB உள் சேமிப்புத் திறன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1450mAh திறன் கொண்ட நீக்கக்கூடிய பேட்டரி (Removable Battery) இடம்பெற்றுள்ளது. இதனை மைக்ரோ யுஎஸ்பி (Micro USB) போர்ட் மூலம் சார்ஜ் செய்யலாம். இசை மற்றும் பொழுதுபோக்குக்காக எம்பி3 பிளேயர் வசதியும், வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டு முறைகளிலும் இயங்கும் எஃப்எம் ரேடியோ (FM Radio) வசதியும் உள்ளது. இதனால் இணைய இணைப்பு இல்லாமலேயே ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.

பயனர்கள் தங்களது தேவைக்கேற்ப மொபைலின் மெனு தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. போனில் Menu > Settings > System > Main menu view ஆகிய பகுதிகளுக்குச் சென்று 3x3 மற்றும் 1x1 என 2 விதமான மெனு அமைப்புகளைத் தேர்வு செய்யலாம்:

3x3 அமைப்பு: ஒரே திரையில் 9 ஆப்ஸ் பார்க்க முடியும்.

1x1 அமைப்பு: ஒவ்வொரு முறையும் ஒரு செயலி மட்டும் பெரிய அளவில் திரையில் தோன்றும்.

சிறிய எழுத்துகளைப் படிக்கச் சிரமப்படுபவர்களுக்கும், எளிமையான மெனு அமைப்பை விரும்புபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

55
அவசர காலத்தில் உதவும் SOS பட்டன்

இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள SOS அவசரகால பட்டன் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும். அவசரநிலைகளில் குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களை விரைவாகத் தொடர்புகொள்ள இது உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு ICE (In Case of Emergency) பிரிவில் அதிகபட்சமாக 5 அவசரகாலத் தொடர்பு எண்களைப் பதிவு செய்ய வேண்டும். அவசர நேரத்தில் SOS பட்டனை அழுத்தும்போது, முதலில் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்குத் தானாகவே அழைப்பு செல்லும். அந்த அழைப்பு ஏற்கப்படாவிட்டால் அடுத்தடுத்த எண்களுக்குத் தொடர்புகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. (எனவே, எண்களை முன்கூட்டியே சரியாகப் பதிவு செய்து வைப்பது அவசியம்).

யாருக்கெல்லாம் இந்த போன் பயனுள்ளதாக இருக்கும்?

Nokia 2660 Flip 4G அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன் அல்ல; மாறாக அடிப்படை வசதிகளுடன் கூடிய எளிமையான மொபைலாகும். குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களுக்கு எளிமையான மொபைல் வாங்கிக் கொடுக்க நினைப்பவர்கள், ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க விரும்புபவர்கள் (Digital Detox), 2வது மொபைலாகவோ அல்லது அவசரகால SOS வசதியுடன் கூடிய பட்டன் போனைத் தேடுபவர்களுக்கோ இந்த மாடல் மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories