இதைத்தானே இத்தனை நாளா எதிர்பார்த்தோம்.. சிக்னல் இல்லைனாலும் பிரச்சினை இல்லை

Published : Jan 02, 2026, 04:45 PM IST

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனது வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கூடுதல் கட்டணமோ, தனி செயலிகளோ தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
12
பிஎஸ்என்எல் VoWiFi

டெல்லியில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பில், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. 2026 புத்தாண்டு தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த சேவை, மொபைல் சிக்னல் இல்லாத அல்லது பலவீனமாக உள்ள இடங்களிலும், வைஃபை நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகளை மேற்கொள்ளவும் பெறவும் உதவுகிறது. இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு அனுபவம் மேலும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் VoWiFi சேவையை பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் சில குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே இந்த வசதியை வழங்கிய நிலையில், தற்போது அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் மற்றும் கட்டிடங்களுக்கு சிக்னல் பிரச்னை அதிகம் உள்ள இடங்களிலும் இணைப்பு தரம் மேம்பாடும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

22
பிஎஸ்என்எல் வைஃபை காலிங்

வைஃபை காலிங் வசதி மூலம், பிஎஸ்என்எல் பயனர்கள் செல்லுலார் சிக்னல் குறைவாக இருந்தாலும், தடையின்றி குரல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, பாரத் ஃபைபர் அல்லது பிற பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும் இடங்களில், ஆனால் மொபைல் நெட்வொர்க் பலவீனமாக இருக்கும் சூழலில், இந்த VoWiFi சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அழைப்புகளுடன் சேர்த்து, செய்திகளை அனுப்பவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

வாய்ஸ் ஓவர் வைஃபை என்பது, மொபைல் சிக்னல் பலவீனமான தருணங்களில், அழைப்புகளைத் தானாகவே வைஃபை நெட்வொர்க்கிற்கு மாற்றும் தொழில்நுட்பமாகும். இதற்காக பொதுவாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. தற்போதைய மொபைல் எண்ணையே பயன்படுத்தி, எந்த மூன்றாம் தரப்பு செயலிகளும் இல்லாமல், நேரடியாக வைஃபை மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதனால், பிஎஸ்எல் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் நம்பகமான தொடர்பு வசதி கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories