Jio Plan : 30 நாட்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் இலவசம்.. ஜியோ நிறுவனம் அதிரடி - முழு விபரம் இதோ !!

Published : Aug 05, 2023, 10:24 PM IST

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. 30 நாட்களுக்கு முற்றிலும் இலவச சேவையை பற்றி பார்க்கலாம்.

PREV
15
Jio Plan : 30 நாட்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் இலவசம்.. ஜியோ நிறுவனம் அதிரடி - முழு விபரம் இதோ !!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ (JIO) வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. இது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளது. போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களை கவரும் வகையில் ஜியோ நிறுவனம் மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.

25

ஆம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை புதிய ஜியோ போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவசமாக வழங்குகிறது. அவை முறையே ஜியோ ரூ 399 மற்றும் ஜியோ ரூ 699 ஆகும். இவை இரண்டும் போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டங்கள் ஆகும். மேலும் ஜியோ 599 ரூ. தனிப்பட்ட திட்டமாகும்.

35

இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றை 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தலாம். ஜியோ 599 ரூ. போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வரம்பற்ற டேட்டா வசதி கிடைக்கும். கூடுதலாக, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பும் வாய்ப்பும் கிடைக்கும். Jio TV, Jio Cinema, Jio Sawan மற்றும் Unlimited Caller Tune வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஜியோ ரூ 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 75 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.

45

இந்த திட்டத்தில் 3 ஆட்-ஆன் குடும்ப சிம்களுக்கான விருப்பமும் உள்ளது, ஒரு சிம்மிற்கு 5 ஜிபி டேட்டா. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சவான் மற்றும் அன்லிமிடெட் காலர் ட்யூன் வசதிகள் உள்ளன. ஜியோ ரூ 699 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 100 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு வசதி கிடைக்கும். மேலும், குறுஞ்செய்தி அனுப்பும் வாய்ப்பும் இருக்கும்.

55

இந்தத் திட்டத்தில் 3 ஆட்-ஆன் குடும்ப சிம்களின் தேர்வு உள்ளது மற்றும் அனைத்து சிம்களுக்கும் தலா 5 ஜிபி டேட்டா உத்தரவாதம் அளிக்கப்படும்.  இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது OTT, இலவச அமேசான் பிரைம் உறுப்பினர் மற்றும் இலவச அமேசான் பிரைம் உறுப்பினர் ஆகியவற்றுடன் கூடுதலாக வருகிறது. இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சவான் மற்றும் அன்லிமிடெட் காலர் டியூன் வசதிகளும் உள்ளன.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Read more Photos on
click me!

Recommended Stories