
செப்டம்பர் 17, 2025: புது டெல்லி - கூகுள் ஜெமினி ஏஐ (Google Gemini AI) சமீபத்தில் அதன் அற்புதமான செயற்கை நுண்ணறிவு அம்சங்களுக்காக சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, "நானோ பனானா" (Nano Banana) என்ற அம்சம் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த புதிய ஏஐ கருவி மூலம் உருவாக்கப்பட்ட தனித்துவமான படங்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற தளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகின்றன. இந்த அம்சம், கூகுள் ஃப்ளாஷ் 2.5 ஏஐ சாட்போட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் பதிவேற்றிய புகைப்படங்களை யதார்த்தமான, ஸ்டைலான படங்களாக மாற்றுவதால் இது மிகவும் பிரபலமாக உள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பதால், நீங்கள் எத்தனை படங்களை வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான "நானோ பனானா" ஏஐ படங்களை உருவாக்க, நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே:
முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி செயலியை நிறுவவும் அல்லது கூகுள் ஏஐ ஸ்டூடியோ இணையதளத்திற்குச் செல்லவும். "நானோ பனானா" படத்தை உருவாக்கும் விருப்பத்தைத் தேடவும். நீங்கள் விரும்பும் கட்டளை அல்லது ப்ராம்ப்ட்டை டைப் செய்யவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் புகைப்படத்தை, ப்ராம்ப்ட் பகுதிக்கு அடுத்ததாக உள்ள "+" ஐகானைக் கிளிக் செய்து பதிவேற்றவும். இறுதியாக, "Run Ctrl Enter" பட்டனைக் கிளிக் செய்யவும். உங்கள் கட்டளையின் அடிப்படையில் ஒரு புதிய ஏஐ படத்தை அது உருவாக்கும்.
1. 1970-களின் போஹேமியன் பார்க் பிக்னிக்: (Prompt 1) 1970-களின் பாணியில் ஒரு இளம் குழந்தையை வெயிலான நகர்ப்புற பூங்காவில் இருப்பது போல, மஞ்சள் நிற மேக்ஸி ஸ்கர்ட், வெள்ளை நிற பிளவுஸ், சங்கிலி டாலர்கள் மற்றும் காலில் சாண்டல்களுடன் மிக யதார்த்தமான 4K அவுட்டோர் போர்ட்ரெய்ட். குழந்தையை ஒரு செக் போர்த்திய பிக்னிக் போர்வையில் அமர்ந்து, ஒரு கையில் பூவை மேலே வீசுவது போல சித்தரிக்கவும். அருகில் பழங்கள் நிறைந்த ஒரு கூடையும் வைக்கவும்.
2. நவீன நகரத் தெரு சாகசம்: (Prompt 2) பரபரப்பான நகரத் தெருவில், நவீன உடை அணிந்த ஒரு குழந்தையின் யதார்த்தமான போர்ட்ரெய்ட். நீல ஜீன்ஸ், வெள்ளை டி-ஷர்ட், டெனிம் ஜாக்கெட் மற்றும் வெள்ளைக் காலணிகள் அணிந்து, ஒரு செங்கல் சுவரில் சாய்ந்து இருப்பது போல சித்தரிக்கவும். அருகில் ஒரு சிகப்பு சைக்கிள் இருப்பது போலவும், பின்புறத்தில் கடைகள் மற்றும் நடமாடும் மக்கள் இருப்பது போலவும் சித்தரிக்கவும்.
3. பழமையான பண்ணை நிலத்தில் ஆய்வு: (Prompt 3) 1950-களின் எளிமையான பண்ணை நிலத்தில் ஒரு குழந்தை இருப்பது போன்ற யதார்த்தமான கிராமப்புற போர்ட்ரெய்ட். மங்கிய பச்சை நிற ஓவர்ஆல், கோடு போட்ட சட்டை, வைக்கோல் தொப்பி மற்றும் பூட்ஸ் அணிந்து, ஒரு மரப்பெட்டியில் ஆப்பிள்களை கையில் வைத்திருப்பது போல சித்தரிக்கவும். பின்புறத்தில் வயல்வெளிகள், வைக்கோல் கட்டுக்கள் மற்றும் ஒரு பழைய சிவப்பு டிராக்டர் இருப்பது போலவும் சித்தரிக்கவும்.
4. வீட்டில் ஒரு சூடான நூலகம்: (Prompt 4) 1990-களின் கிரன்ஜ் பாணியில், வீட்டில் ஒரு நூலகத்தின் மூலையில் ஒரு குழந்தை அமர்ந்திருப்பது போன்ற யதார்த்தமான போர்ட்ரெய்ட். பெரிய பிளாக் கார்கோ பேன்ட், ஒரு பெரிய பிளெய்டு சட்டை, மற்றும் பூட்ஸ் அணிந்து, ஒரு புத்தகத்தை படிக்கும் தோரணையில் இருப்பது போல சித்தரிக்கவும். அருகில் பழைய புத்தகங்கள் மற்றும் ஒரு சூடான காபி கோப்பை இருப்பது போலவும் சித்தரிக்கவும்.
5. கடற்கரை நடனம்: (Prompt 5) ஒரு இளம் குழந்தை, கடலில் அலைகள் வரும் கடற்கரையில், 1960-களின் சர்ஃப் வைப் உடன் இருப்பது போல யதார்த்தமான கடலோர போர்ட்ரெய்ட். ஹை-வெயிஸ்டட் பூக்கள் போட்ட ஷார்ட்ஸ், ஒரு கிராப்ட் டாப், தொப்பி அணிந்து, காலில் சறுக்கிப் போடும் தோரணையில் இருப்பது போல சித்தரிக்கவும். பின்புறத்தில், ஒரு தெளிவற்ற ஆரஞ்சு வானம் மற்றும் அலைகள் இருப்பது போல சித்தரிக்கவும்.
குறிப்பு: மேலே உள்ள அனைத்து ப்ராம்ப்ட்களிலும், "The child’s face must remain exactly the same as in the provided reference photo, with no alterations" (குழந்தையின் முகம் வழங்கப்பட்ட புகைப்படத்தில் உள்ளபடியே இருக்க வேண்டும், எந்த மாற்றங்களும் இல்லாமல்) என்ற வரியை சேர்க்க மறக்காதீர்கள்.