வெறும் 8.49 மி.மீ தடிமன்... 7,000mAh ராட்சத பேட்டரி: களமிறங்கும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ; முழு விவரம்!

Published : Oct 27, 2026, 04:21 PM IST

7,000mAh பேட்டரி இருந்தும் வெறும் 8.49 மி.மீ தடிமன் மட்டுமே.. ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட், சோனி கேமராவுடன் வரும் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ முழு சிறப்பம்சங்கள் இதோ!

PREV
14
7,000mAh பேட்டரியுடன் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ!

நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் பயனர்களைக் கவரும் வகையில், மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ‘மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ’ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது குறித்த முக்கியத் தகவல்கள் மற்றும் சிறப்பம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பொதுவாக அதிக பேட்டரி திறன் கொண்ட போன்கள் தடிமனாக இருக்கும் என்ற பிம்பத்தை உடைக்கும் விதமாக, இந்த போன் வெறும் 8.49 மி.மீ தடிமனும், 204 கிராம் எடையும் கொண்ட நேர்த்தியான வடிவமைப்பில் உருவாகியுள்ளது. 7,000mAh பேட்டரி உள்ளது. சந்தையில் பிற நிறுவனங்கள் 67W அதற்கும் மேலான வேகத்தில் சார்ஜிங் தரும் நிலையில், இதில் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டரி பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக நிரம்புவதற்குச் சற்றே கூடுதல் நேரம் ஆகலாம்.

24
1.5K AMOLED ஸ்கிரீன் & கேமரா அமைப்புகள்

6.78-இன்ச் கொண்ட 1.5K AMOLED திரை, மென்மையான பயன்பாட்டிற்கு 144Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate), திரையின் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i (Corning Gorilla Glass 7i) இடம்பெற்றுள்ளது. 50MP சோனி LYTIA 710 சென்சார் (f/1.8 அப்பேச்சர் மற்றும் 3-இன்-1 லைட் சென்சார் உடன்), இது குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த படங்களை எடுக்க உதவும். வீடியோ கால் அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்காக முன்புறத்தில் 32MP கேமரா உள்ளது. இதில் டெலிஃபோட்டோ லென்ஸ் தவிர்க்கப்பட்டு, 2MP மேக்ரோ சென்சார் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

34
பிராசஸர், நினைவகம் & சாப்ட்வேர் செயல்திறன்

ஏற்கனவே நத்திங் போன் (3a) மற்றும் ரெட்மி நோட் 14 புரோ+ ஆகியவற்றில் இடம்பெற்ற ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 (Snapdragon 7s Gen 3) பிராசஸர். இது அன்றாடப் பயன்பாடுகள் மற்றும் பல்பணிக்கு (multitasking) ஏற்றது. அதிவேக LPDDR5X ரேம் மற்றும் UFS 3.1 சேமிப்பகத் தரம் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 உடன் அறிமுகமாகிறது. இதனுடன் 4 முறை ஆண்ட்ராய்டு OS அப்டேட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்பட உள்ளன. தூசி மற்றும் லேசான தண்ணீர்த் துளிகளைத் தாங்கும் வகையில் IP64 தரம்.

44
வடிவமைப்பு வண்ணங்கள் & சந்தை நிலவரம்

செப்டம்பரில் பெர்லினில் நடைபெற்ற ஐஎஃப்ஏ (IFA) நிகழ்வில் மோட்டோரோலா இந்த போனின் வருகையை உறுதி செய்தது. முன்னதாக வந்த எட்ஜ் 60 நியோ (6.36-இன்ச் திரை, 5,200mAh பேட்டரி) இந்தியாவில் வெளியாகாத நிலையில், தற்போது பெரிய திரை மற்றும் ராட்சத பேட்டரியை விரும்பும் இந்திய பயனர்களைக் குறிவைத்து இந்த மாடல் களமிறங்குகிறது. மவுண்டன் வியூ (Mountain View), மில்கி ப்ளூ (Milky Blue), சேஜ் (Sage) மற்றும் கிரே லைலாக் (Grey Lilac) ஆகிய நான்கு கவர்ச்சிகரமான பேன்டோன் வண்ணங்களில் வெளியாகிறது.

சந்தையில் போட்டி நிறுவனங்களின் கேமரா மற்றும் பிராசஸர் வேகத்தை எதிர்கொள்ளும் வேளையில், மோட்டோரோலா நிர்ணயிக்கப் போகும் இறுதி விலையே இந்த போனின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories