7000mAh Battery Phone: 3 நாள் சார்ஜ் + 7000mAh பேட்டரி.. சார்ஜர் தேவையில்லை.. மோட்டோரோலாவின் புதிய போன் அசத்துது

Published : May 25, 2026, 05:21 PM IST

7000mAh Battery Phone: மோட்டோரோலா தனது புதிய மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் 7,000mAh பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6400 செயலி மற்றும் 50MP கேமராவுடன் வருகிறது.

PREV
15
மோட்டோ ஜி37 பவர் மொபைல்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பேட்டரி திறன் மற்றும் நீண்டநேர பயன்பாடு மீதான போட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், மோட்டோரோலா தனது புதிய மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் மோட்டோ ஜி37 மற்றும் மோட்டோ பட்ஸ் 2 இயர்பட்ஸும் சந்தையில் வெளியாகியுள்ளன. புதிய சாதனங்களை இணைய வணிக தளங்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் வாங்கலாம்.

25
மோட்டோ ஜி37 பவர் விலை

புதிய மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் சாதாரண மாடலான மோட்டோ ஜி37 ரூ.13,999 முதல் கிடைக்கிறது. அதிக நேரம் சார்ஜ் நீடிக்க வேண்டும் என்ற பயனாளர்களின் எதிர்பார்ப்பை குறிவைத்து, இந்த சாதனத்தில் 7,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம் என நிறுவனம் தெரிவிக்கிறது.

35
மோட்டோ ஜி37 பவர் வசதிகள்

6 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6400 செயலி இதில் இடம்பெற்றுள்ளது. இதனுடன் 8 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிவேக இணைய இணைப்பு மற்றும் பல செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் அனுபவத்தையும் இந்த சாதனம் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது.

45
மோட்டோ ஜி37 பவர் கேமரா

புகைப்பட ஆர்வலர்களையும் கவனத்தில் கொண்டு, 50 மெகாபிக்சல் செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது. புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்குதல், மங்கலான படங்களை தெளிவாக்குதல் உள்ளிட்ட தொகுப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 120 ஹெர்ட்ஸ் திரை புதுப்பிப்பு விகிதத்துடன் கூடிய 6.7 அங்குல திரை இதில் உள்ளது.

55
மோட்டோ பட்ஸ் 2

இதனுடன் அறிமுகமான மோட்டோ பட்ஸ் 2 இயர்பட்ஸ், இரட்டை ஒலி இயக்கி தொழில்நுட்பம், சுற்றுப்புற சத்தத்தை குறைக்கும் வசதி மற்றும் 53 மணி நேரம் வரை ஒலி இயக்க நேரத்தை வழங்குகிறது. இதன் மூலம் மோட்டோரோலா, போனும் ஒலி சாதனமும் சேர்ந்த முழுமையான அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories