ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவை இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்று பெரிய நிறுவனங்கள். ஆனால், பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது. தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒருபுறம் குறைந்து வரும் நிலையில், மறுபுறம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.