10,100mAh பேட்டரி, 200MP கேமரா: டூயல் ஃபேன் கூலிங், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் களமிறங்கிய ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன்!

Published : Oct 22, 2026, 06:10 PM IST

10100mAh பேட்டரி, 200MP கேமரா மற்றும் 10000 நிட்ஸ் டிஸ்பிளேவுடன் வெளியானது ஹானர் வின் 2 (HONOR WIN 2)! இதன் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ!

PREV
14
10,100mAh பேட்டரி, 200MP கேமராவுடன் களமிறங்கிய ஹானர் வின் 2

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர், 10000mAh பேட்டரி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களைத் தனது ‘வின் சீரிஸ்’ வரிசையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘ஹானர் வின் 2’ (HONOR WIN 2) ஸ்மார்ட்போனைச் சீனச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இத்துடன் 'ஹானர் வின் ஆர்டி2' என்ற மாடலும் அறிமுகமாகியுள்ளது.

24
டிஸ்பிளே & டிசைன்,

ஹானர் வின் 2 ஸ்மார்ட்போன் 6.89 இன்ச் (3104 x 1440 பிக்சல்கள்) QHD+ OLED அல்ட்ரா டைனாமிக் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது ட்ரூ கலர் டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. அதிகபட்சமாக 10,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2,000 நிட்ஸ் குளோபல் பீக் பிரைட்னஸ் ஆதரவை வழங்குவதால், கேமிங் மற்றும் ஓடிடி பிரியர்களுக்குச் சிறந்த காட்சி அனுபவத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & சார்ஜிங் திறன்

ஹானர் வின் 2 ஸ்மார்ட்போனில் 10,100mAh திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை விரைவாக சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

34
கேமரா சிறப்பம்சங்கள்

பின்பக்க கேமரா: ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா இடம்பெற்றுள்ளது.

கேமரா அம்சங்கள்: 4K வீடியோ ரெக்கார்டிங், 30x டிஜிட்டல் ஜூமிங், ஏஐ சூப்பர் டெலிபோட்டோ, ஈகிள் ஐ ஸ்னாப்ஷாட், இன்டலிஜன்ட் போகஸ் டிராக்கிங், சப்ஜெக்ட் போகஸ் டிராக்கிங், நைட் மோட் மற்றும் போர்ட்ராய்டு மோட் வசதிகள் உள்ளன.

முன்பக்க கேமரா: செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 50 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2டி ஃபேஸ் ரிககனைசேஷன் சப்போர்ட் கொண்டது.

44
பேட்டரி & சார்ஜிங் திறன்

ஹானர் வின் 2 ஸ்மார்ட்போனில் 10,100mAh திறன் கொண்ட பிரம்மாண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை விரைவாக சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை மற்றும் வேரியண்ட்கள் (சீன சந்தை நிலவரப்படி)

12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பகம்: தோராயமாக ரூ. 77,782

16 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பகம்: தோராயமாக ரூ. 82,025

12 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பகம்: தோராயமாக ரூ. 89,098

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories