குடிநீர் முதல் ரத்த செல்கள் வரை: மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நாம் நினைத்ததை விட ஆபத்தானதா? புதிய ஆய்வு சொல்வது என்ன?

Published : Nov 21, 2026, 12:39 PM IST

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் துகள்கள் தண்ணீருடன் வினைபுரிந்து எப்படித் தீங்கு விளைவிக்கின்றன? கொலம்பியா மற்றும் பெர்க்லி பல்கலை. ஆய்வின் திடுக்கிடும் தகவல்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து பார்ப்போம்.

PREV
14
குடிநீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் புதிய கண்டுபிடிப்பு

உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் முதல் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வேதியியல் ரீதியாக நிலையானது என்றும், சுற்றியுள்ள பொருட்களுடன் எளிதில் வினைபுரியாது என்றும் இதுவரை கருதப்பட்டது. ஆனால், பிளாஸ்டிக் மிகச் சிறிய துகள்களாக உடையும்போது இந்தக் கருத்து மாறுபடலாம் எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கொலம்பியா பல்கலை.மற்றும் கலிபோர்னியா பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் 'நேச்சர்' (Nature) இதழில் வெளியிட்டுள்ள ஆய்வில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ், நானோபிளாஸ்டிக்ஸ் துகள்கள் தண்ணீருடன் வினைபுரிந்து, உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரியாக்டிவ் மூலக்கூறுகளை உருவாக்குவதைக் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக் சிறிய துகள்களாக உடையும்போது அதன் மேற்பரப்புப் பகுதி (Surface area) மிக அதிகமாகிறது. இதனால் சுற்றியுள்ள தண்ணீரில் மாற்றம் ஏற்பட்டு, 'ரியாக்டிவ் ஆக்சிஜன் ஸ்பீஷீஸ்' (ROS) எனப்படும் உயர் ஆற்றல் கொண்ட ரேடிக்கல்கள் உருவாகின்றன.

24
மனித உடலில் ஏற்படும் தாக்கம்

ரத்தத்திலும் செல்களிலும் அதிக அளவு தண்ணீர் உள்ளதால், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உள்ளே செல்லும்போது வேதியியல் வினைகளில் ஈடுபடக்கூடும். இந்த ROS மூலக்கூறுகள் செல்கள் மற்றும் திசுக்களைச் சேதப்படுத்தலாம். 2024-ஆம் ஆண்டு ஆய்வில், ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

2026-ஆம் ஆண்டில் மனித உடலில் உள்ள நச்சு மைக்ரோபிளாஸ்டிக்ஸ் தொடர்பான ஆய்வுக்கு 144 மில்லியன் டாலர் திட்டம் தொடங்கப்பட்டதோடு, குடிநீரில் கவனம் செலுத்த வேண்டிய மாசுபாடுகளின் பட்டியலில் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (EPA) இதனைச் சேர்த்துள்ளது. மாரடைப்பு, பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் மூளைக் கட்டிகள் போன்ற பாதிப்புகளுடன் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் தொடர்புபடுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட நோய்களை இவை நேரடியாக ஏற்படுத்துகின்றனவா என்பது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

34
தண்ணீர் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றம்

பல பிளாஸ்டிக்குகள் தண்ணீரை விரட்டும் தன்மை (Hydrophobic) கொண்டவை. இத்தகைய பிளாஸ்டிக் மேற்பரப்புடன் தண்ணீர் தொடர்பு கொள்ளும்போது, எலக்ட்ரான் பரிமாற்றம் எளிதாகி ரேடிக்கல்கள் உருவாகின்றன. குறிப்பாக, தண்ணீரில் உள்ள ஹைட்ராக்சைடு அயனிகள் பிளாஸ்டிக் மேற்பரப்பைச் சுற்றிச் செறிவடைந்து, திசுக்களைச் சேதப்படுத்தும் 'ஹைட்ராக்சில் ரேடிக்கல்களை' (Hydroxyl radicals) உருவாக்குகின்றன.

44
பாதுகாப்பான பிளாஸ்டிக் உருவாகுமா?

தண்ணீருடன் வினைபுரியும் தன்மை குறைவான, பாதுகாப்பான பிளாஸ்டிக்குகளை வடிவமைக்க இந்த ஆய்வு உதவலாம். மைக்ரோவேவில் சூடுபடுத்துதல் மற்றும் சூரிய ஒளியில் பாட்டில் தண்ணீரை வைத்திருத்தல் போன்ற அன்றாடச் செயல்களும் பிளாஸ்டிக் துகள்களை உருவாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டின் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதற்கான புதிய வழிமுறைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories