Meta மெட்டா Oakley ஸ்மார்ட் கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! ரூ.41,800 விலையில் 3K வீடியோ, ஹிந்தி AI வசதி மற்றும் பிட்னஸ் டிராக்கிங். விற்பனை டிசம்பர் 1 முதல்.
Meta இந்தியாவில் களமிறங்கும் மெட்டாவின் அதிநவீன 'Oakley' ஸ்மார்ட் கிளாஸ்!
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), பிரபல கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான Oakley உடன் இணைந்து தனது புதிய தலைமுறை ஸ்மார்ட் கிளாஸை (Smart Glasses) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு சாதாரண கூலிங் கிளாஸ் போலவே இருந்தாலும், இதில் மறைந்திருக்கும் தொழில்நுட்பம் நம்மை வியக்க வைக்கும் வகையில் உள்ளது. ரூ.41,800 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி, டிசம்பர் 1 முதல் விற்பனைக்கு வருகிறது.
26
கண்ணில் அணியும் கேமரா - 3K வீடியோ ரெக்கார்டிங்
இந்த கண்ணாடியின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதில் உள்ள பில்ட்-இன் கேமரா (Built-in Camera) தான். இதன் மூலம் நாம் பார்க்கும் காட்சிகளை அப்படியே 3K துல்லியத்தில் வீடியோவாக பதிவு செய்ய முடியும். கைகளை பயன்படுத்தாமலே, வெறும் குரல் கட்டளை (Voice Command) மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கலாம். சைக்கிள் ஓட்டுபவர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
36
மெட்டா AI - இனி ஹிந்தியிலும் பேசலாம்!
இந்த ஸ்மார்ட் கிளாஸில் மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (Meta AI) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. விசேஷம் என்னவென்றால், இது ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தியிலும் செயல்படும். "Hey Meta" என்று அழைத்து, நமக்குத் தேவையான தகவல்களைக் கேட்கலாம், அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் மெசேஜ் அனுப்பலாம். விரைவில் தீபிகா படுகோன் போன்ற பிரபலங்களின் குரலிலும் இந்த AI பேசும் வசதி வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், ஸ்ட்ராவா (Strava) மற்றும் கார்மின் (Garmin) போன்ற ஃபிட்னஸ் செயலிகளுடன் இந்த கண்ணாடி இணையும் வசதி கொண்டது. மொபைல் போனை கையில் எடுக்காமலே, ஓடும் வேகம், இதயத் துடிப்பு போன்ற விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
56
தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது!
விளையாட்டு வீரர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால், இது IPX4 தரச் சான்று பெற்றுள்ளது. அதாவது, வியர்வை அல்லது லேசான மழைத் துளிகள் பட்டாலும் கண்ணாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், இதில் உள்ள Open-ear speakers மூலம் பாட்டு கேட்கும்போது, சுற்றுப்புற ஒலிகளையும் நம்மால் கேட்க முடியும் என்பது கூடுதல் பாதுகாப்பு.
66
பேட்டரி மற்றும் சார்ஜிங்
ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் கூறுகிறது. இதனுடன் வழங்கப்படும் போர்ட்டபிள் சார்ஜிங் கேஸ் (Charging Case) மூலம் கூடுதலாக 48 மணிநேரம் வரை சார்ஜ் செய்துகொள்ள முடியும். வெறும் 20 நிமிடங்களில் 50% சார்ஜ் ஏறும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
விரைவில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதியும் இதில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.