இந்த தொழில்நுட்பம் சைபர் பாதுகாப்பு நிபுணர்களால் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது. பயனர்கள் விரும்பினால், இதன் தொழில்நுட்ப விவரங்கள் வலைப்பதிவையும் வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது பலருக்கும் ஏற்படும் பொதுவான கவலை இலக்கணப் பிழைகள் ஆகும். இந்தப் பிரச்சனையை நீக்க, மெட்டா புதிய AI அடிப்படையிலான எழுத்து உதவி (Writing Help) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, செய்திகளைத் தட்டச்சு செய்யும்போது சரியான சொற்களையும், இலக்கணத் திருத்தத்தையும் இந்த வசதி வழங்கும். முக்கியமாக, தனியுரிமையை பாதிக்காமல், பயனர்கள் நிம்மதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது அளித்துள்ளது.
23
வாட்ஸ்அப் புதிய அம்சங்கள்
புதிய வசதியின் மூலம், நீங்கள் தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ செய்தி அனுப்பும்போது பேனா ஐகான் தெரியும். ஒரு செய்தியை எழுதத் தொடங்கியவுடன், அந்த ஐகானை தட்டினால், பரிந்துரைகளைக் கொண்ட பாப்-அப் தோன்றும். உங்களுக்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்தால், அது உங்கள் தட்டச்சு செய்த செய்தியை மாற்றிக் கொள்கிறது. இதனால், செய்தியை முழுமையாக்க வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கும் சூழலில் கூட எளிதாக சரியான செய்தியை அனுப்ப முடியும்.
33
மெட்டா ஏஐ
இந்த தொழில்நுட்பம் சைபர் பாதுகாப்பு நிபுணர்களால் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது. பயனர்கள் விரும்பினால், இதன் தொழில்நுட்ப விவரங்கள் வலைப்பதிவையும் வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. மொத்தத்தில், வாட்ஸ்அப்பில் இனி தட்டச்சு செய்யும்போது இலக்கணப் பிழைகள், தவறான வாக்கியங்கள், சரியான சொற்கள் இல்லாமை போன்ற சிக்கல்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த AI வசதி அமையும்.