ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற அட்டகாசமான டேப்லெட்: 8,000mAh பேட்டரியுடன் வந்தது புதிய Logic Neo X1 Pro டேப்லெட்!

Published : Nov 22, 2026, 10:45 AM IST

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக 10.95-இன்ச் 90Hz திரை, ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம், 8GB ரேம், 4G LTE மற்றும் 8,000mAh பேட்டரியுடன் லாஜிக் நியோ எக்ஸ்1 புரோ (Logic Neo X1 Pro) டேப்லெட் அறிமுகமாகியுள்ளது.

PREV
14
புதிய Logic Neo X1 Pro ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகம்!

மாணவர்கள், ஆசிரியர்கள் & கல்வி நிறுவனப் பயன்பாடுகளை இலக்காகக் கொண்டு, லாஜிக் (Logic) நிறுவனம் தனது முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டான 'நியோ எக்ஸ்1 புரோ' (Neo X1 Pro) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இன்டராக்டிவ் டிஸ்ப்ளேக்கள் (Interactive displays) மற்றும் நிறுவனத் தீர்வுகளை (Enterprise solutions) மட்டுமே வழங்கி வந்த லாஜிக் நிறுவனம், இதன் மூலம் ஆண்ட்ராய்டு டேப்லெட் சந்தையில் முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளது.

24
திரை & வடிவமைப்பு (Display & Design)

லாஜிக் நியோ எக்ஸ்1 புரோ டேப்லெட்டில் 10.95-இன்ச் WUXGA IPS திரை (1,920 x 1,200 பிக்சல்கள் ரெசல்யூஷன்) மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு லோ ப்ளூ-லைட் (Low blue-light) பாதுகாப்பு, வெளிச்சம் பிரதிபலிக்காத ஆன்டி-கிளேர் (Anti-glare) ஃபினிஷ், கைரேகைகள் படியாத ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் பூச்சு & கிருமிகள் பரவாமல் தடுக்கும் ஆன்டிமைக்ரோபியல் (Antimicrobial) பூச்சு ஆகிய சிறப்பம்சங்கள் இந்தத் திரையில் உள்ளன. 7.89 மிமீ மெல்லிய தடிமனும், 520 கிராம் எடையும் கொண்ட டேப்லெட், அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் அலாய் மற்றும் பாலிகார்பனேட் இணைந்த உடலமைப்புடன் 'ஸ்பேஸ் கிரே' (Space Grey) நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டாண்டர்ட் எஜுகேஷன் எடிஷன் (Standard education edition) தூசி மற்றும் நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாக்கும் IP52 தரச்சான்றையும் பெற்றுள்ளது.

34
செயல்திறன், கேமரா & இணைப்பு வசதிகள்

ஆக்டா-கோர் (Octa-core) பிராசஸர் உடன் 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு மூலம் ஸ்டோரேஜை 1TB வரை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். எனினும், பிராசஸரின் பெயர் மற்றும் முழு விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம் மற்றும் கூகுள் மொபைல் சேவைகள் (GMS) ஆதரவுடன் இது செயல்படுகிறது. படங்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 13MP பின்புறக் கேமரா, 8MP முன்பக்கக் கேமரா மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi 6, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் GPS ஆகிய இணைப்பு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

44
பேட்டரி & பிரத்யேக உபகரணங்கள் (Accessories)

இந்த டேப்லெட்டில் 8,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது; இதனை USB Type-C போர்ட் மூலம் 18W வேகத்தில் சார்ஜ் செய்யலாம். ஆன்லைன் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்களின் போது, மேசையில் எழுதப்படும் குறிப்புகள் அல்லது பிற பணிகளை முன்பக்கக் கேமரா மூலம் தெளிவாகப் படம்பிடிக்க உதவும் வகையில், கிக்ஸ்டாண்ட் (Kickstand) கொண்ட பாதுகாப்பு கவர் மற்றும் மேக்னடிக் மினி-மிரர் (Magnetic mini-mirror) ஆகியவை டேப்லெட்டுடன் வழங்கப்படுகின்றன.

மேலும், ஆக்டிவ் ஸ்டைலஸ் (Active stylus) மற்றும் USB டாக்கிங் கீபோர்டு ஆகியவை தனியாகக் கிடைக்கும். இந்தியாவில் லாஜிக் நியோ எக்ஸ்1 புரோ டேப்லெட்டின் விலை, விற்பனைத் தேதி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும் விவரங்கள் குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories