Jio Plan: ஏர்டெல்லை அலறவிடும் ஜியோ! அன்லிமிடெட் இன்டர்நெட் + இலவச OTT ஆப்ஸ்.. ஃப்ரீடம் பிளான்!

Published : Jul 25, 2026, 02:18 PM IST

Jio Freedom Plan: ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக 'ஃப்ரீடம் பிளான்' என்ற ஒரு புது பிளானை கொண்டு வந்துள்ளது. இந்த பிளானில் 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் மற்றும் பல OTT ஆப்களுக்கான சந்தாவும் இலவசமாகக் கிடைக்கிறது.

PREV
14
புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜியோ

இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தொடர்ந்து புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதுடன், பழைய வாடிக்கையாளர்களையும் தக்கவைத்துக் கொள்கிறது. தற்போது, ஜியோ தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக 'ஃப்ரீடம் பிளான்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அன்லிமிடெட் இன்டர்நெட்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ஃப்ரீடம் பிளானில், பயனர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். இதனால், இந்த பிளான் டெலிகாம் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பயனர்கள் 100Mbps வேகம் வரை டேட்டாவை டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்யலாம். பிளான் வேலிடிட்டி முடியும் வரை அன்லிமிடெட் இன்டர்நெட்டைப் பயன்படுத்தலாம்.

24
பல OTT ஆப்ஸ்கள் இலவசம்

இந்த பிளானில் பயனர்களுக்கு இன்டர்நெட் உடன் டிவி பொழுதுபோக்கு அம்சங்களும் கிடைக்கின்றன. ஜியோ டிவி உட்பட பல OTT தளங்களுக்கான அணுகலையும் பெறலாம். JioHotstar, SonyLIV, Zee5, Sun NXT, Hoichoi, Discovery+, TimesPlay மற்றும் ShemarooMe போன்ற ஆப்கள் இந்த பேக்கில் அடங்கும்.

லைவ் டிவி சேனல்கள்

OTT ஆப்கள் மட்டுமின்றி, ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலமாக 800-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் லைவ் டிவி சேனல்களைப் பார்க்கும் வசதியும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

கூடுதல் OTT நன்மைகள்

JioHotstar, SonyLIV போன்ற முன்னணி ஆப்களுடன் FanCode (விளையாட்டு நேரலை) மற்றும் ஜியோவின் சொந்த திரைப்பட தளமான JioCinema Premium அணுகலும் இதில் அடங்கும்.

கூடுதல் மாத ஆபர்கள்

12 மாதங்களுக்கான கட்டணத்தைச் செலுத்தி 15 மாத வேலிடிட்டி பெறுவதால், இதில் 3 மாதங்கள் கூடுதல் இலவச வேலிடிட்டியாக (Bonus Validity) வாடிக்கையாளர்களுக்குச் சேர்கிறது.

34
யாருக்கெல்லாம் லாபம்?

இந்த ஃப்ரீடம் பிளானை பெறும் பயனர்களுக்கு ஜியோ ஒரு செட்-டாப் பாக்ஸை வழங்குகிறது. நீங்கள் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால், ஆன்லைனில் கன்டென்ட் உருவாக்கும் பணியில் இருந்தால், அல்லது வீட்டில் இருந்து வேலை (Work From Home) செய்பவராக இருந்தால், இந்த ஃப்ரீடம் பிளான் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

வேலிடிட்டி மற்றும் பிளான் விலை

இந்த புதிய பிளான் JioFiber மற்றும் Jio AirFiber பயனர்களுக்காக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது MyJio ஆப் மூலம் இதை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். இந்த பிளான் 15 மாத வேலிடிட்டியுடன் வருகிறது, இதன் விலை ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18% ஜிஎஸ்டி (GST) மற்றும் நிறுவல் கட்டணம்

இந்த பிளானின் அடிப்படை விலை ரூ.10,000 என்றாலும், இதனுடன் 18% ஜிஎஸ்டி சேரும்போது மொத்தத் தொகை தோராயமாக ரூ.11,800 வரை வரும். புதிய வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) அல்லது ஜியோஃபைபர் (JioFiber) இணைப்பிற்கான நிறுவல் கட்டணம் (Installation Fee - ரூ.1,000) இதனுடன் தள்ளுபடி செய்யப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

44
ஏர்டெல் தத்தளிப்பு

ஜியோவின் இந்த புதிய ஃப்ரீடம் பிளான், பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தில் 40mbps வேகத்தில் மட்டுமே இன்டர்நெட் வழங்குகிறது. இந்த பிளான் ஒரு மாத வேலிடிட்டி கொண்டது. ஜியோவின் வேகம் அதிகமாக இருப்பதால், ஏர்டெல்லுக்கு இந்த புதிய பிளான் கடும் போட்டியாக அமையலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories