Jio Cryptocurrency
ஜியோ ஸ்பியர் (JioSphere) இன்டர்நெட் பிரவுசர்களில், Ethereum லேயர் 2 இல் JioCoin கிரிப்டோ கரன்சி அறிமுகமாகியுள்ளது. மேலும் தற்போது ஜியோ காயின் பாலிகோன் லேப்ஸ் (Polygon Labs) கிரிப்டோகரன்சி தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ஜியோ காயின் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள பல ஜியோஸ்பியர் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் JioCoin இணைப்பைப் பெற்றுள்ளனர்.
JioCoins
"ஜியோ காயின்ஸ் (JioCoins) என்பது பிளாக்செயின் அடிப்படையிலான ரிவார்டு டோக்கன். பயனர்கள் தங்கள் இந்திய மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (JPL) ஐ பயன்படுத்தி, பல்வேறு மொபைல் அல்லது இன்டர்நெட் அடிப்படையிலான செயலிகள் மூலம் சம்பாதிக்க முடியும்" என்று ரிலையன்ஸ் குறிப்பிடுகிறது.
Reliance Cryptocurrency
பல்வேறு ஜியோ செயலிகள் மூலம், பயனர்கள் Web3 டோக்கன்களைப் பெறலாம். அவை அவர்களின் வாலட்டில் டெபாசிட் செய்யப்படும். இந்த கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு பயனர் செயல்பாடுகளைப் பொறுத்தது. MyJio, JioCinema உள்பட பல ஜியோ மொபைல் அப்ளிகேஷன்களில் விரைவில் JioCoin அறிமுகமாகும் என்று தெரிகிறது.
Crypto currency
JioSphere பிரவுசரில் இன்டர்நெட்டை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் ஜியோ காயின்களை இலவசமாகப் பெறலாம். இந்த கிரிப்டோ நாணயங்களை பாலிகோன் லேப்ஸ் வாலட்டில் சேமித்துக்கொள்ளலாம்.
Cryptocurrency by Reliance Jio
தற்போதைய நிலவரப்படி, ஜியோ காயின் மதிப்பு என்ன, அதை எவ்வாறு வர்த்தகம் செய்யலாம் என்ற குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த ஜியோ காயின்களை மொபைல் ரீசார்ஜ்கள், பில் பேமெண்ட் போன்ற பிற ஜியோ சேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Jio Coin Cryptocurrency
ரிலையன்ஸ் வரும் நாட்களில் JioCoin பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. அப்போது அதன் மதிப்பு, திறன்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களும் வெளியிடும்.
JioCoin on Polygon Labs
இப்போது, இந்தியாவில் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் லாபத்தின் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கூடுதலாக 1 சதவீதம் TDS பிடித்தமும் உண்டு. இது ஜியோ காயினுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.