ஜியோவின் புதிய 'சவுண்ட் பே' அம்சம் அறிமுகம்! எதற்காக தெரியுமா?

First Published | Jan 26, 2025, 6:46 PM IST

Jio Sound Pay feature on Bharat Phone: பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் ஜியோ, தற்போது 'ஜியோ சவுண்ட் பே' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

How Jio Sound Pay works?

தொலைத்தொடர்பு துறையில் ஜியோ ஒரு புரட்சி என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஜியோவின் வருகையால் தொலைத்தொடர்பு துறையின் முகமே மாறிவிட்டது. மொபைல் நெட்வொர்க் முதல் ஃபைபர் வரை அனைத்து வகையான சேவைகளையும் அறிமுகப்படுத்திய ஜியோ, சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தியது.

குறைந்த விலையில் அனைத்து வசதிகளையும் விரும்புவோருக்காக ஜியோ பாரத் போனை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த போனில் ஒரு சிறப்பான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Jio Sound Pay in Bharat Phone

தற்போது சிறிய கடைகளுக்குச் சென்றாலும், அங்கே போன் பே, பேடிஎம் போன்ற சவுண்ட் பாக்ஸ்கள் இருப்பதைப் பார்க்கலாம். யாராவது பணம் செலுத்தியவுடன், பணம் வந்ததை இந்தப் பாக்ஸ்கள் தெரிவிக்கும். UPI பரிவர்த்தனைகளில் துல்லியத்திற்காக இந்த சவுண்ட் பாக்ஸ்கள் பயன்படுகின்றன.

ஆனால், இவற்றைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.125 செலுத்த வேண்டும். ஆனால், ஒரு ரூபாய்கூட செலுத்தாமல் இந்த சேவைகளை வழங்க ஜியோ முன்வந்துள்ளது. 


Jio Sound Pay Audio Notification

ஜியோ பாரத் போன்களில் ஜியோ சவுண்ட் பே என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் போனிலேயே பணம் பெறுவதற்கான செய்தியைக் கேட்கலாம். ஜியோ இந்த சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Jio Sound Pay Notification Languages

ஜியோ சவுண்ட் பே அம்சத்தை பயனர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் கேட்கும் வசதியையும் ஜியோ வழங்கியுள்ளது. இதற்காக எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதுகுறித்து ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் சுனில் கூறுகையில், 'தொழில்நுட்பத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றி, ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளிப்பதே எங்கள் நோக்கம்' என்று தெரிவித்துள்ளார். 

Jio Sound Pay Feature

ஜியோ சவுண்ட் பே அம்சத்தின் மூலம், எந்த சவுண்ட் பாக்ஸும் இல்லாமல் போனிலேயே பேமெண்ட் உறுதிப்படுத்தல் செய்தியைக் கேட்கலாம். இந்த அம்சத்தின் மூலம் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1500 வரை மிச்சமாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜியோ சவுண்ட் பேயில் "வந்தே மாதரம்" பாடலின் நவீன பதிப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் மை ஜியோ செயலி அல்லது ஜியோ சாவன் மூலம் இந்தப் பதிப்புகளை தங்கள் ஜியோ டியூன்களாக அமைத்துக்கொள்ளலாம்.

Latest Videos

click me!