ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு குட் நியூஸ்; இந்த 2 பிளான்களின் விலை குறைப்பு
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பினார்கள். இதனால் ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போட்டு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வந்தன.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அதன் தற்போதைய திட்டங்களில் ஒன்றின் விலையையும் குறைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்கள் இந்தத் திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக தொடர்ந்து புகார்கள் கூறி வந்தனர்.
JIO Recharge Plan
அண்மையில் ஏர்டெல் குரல் மற்றும் SMSதிட்டங்களின் விலைகளைக் குறைத்த பின்னர் ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளது. அதாவது ஜியோ ரூ.458 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ரூ.448 ஆக குறைத்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்ந்து 1000 எஸ்எம்எஸ்களுடன் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இதில் எந்த டேட்டா நன்மைகளும் கிடையாது. இது 84 நாட்கள் வேலிட்டி வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி போன்களில் உள்ள 5 ரகசிய அம்சங்கள்.. யாருக்கும் தெரியாது.!!
JIO Best Plan
இந்த திட்டம் குரல் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்கள் வேண்டும் பயனர்களுக்கு மிகவும் மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதேபோல் ஆரம்பத்தில் ஜியோ ரூ.1958க்கு ஒரு திட்டத்தை வழங்கியது. இது ஒரு முழு வருடத்திற்கு (365 நாட்கள்) வரம்பற்ற அழைப்பு மற்றும் 3600 எஸ்எம்எஸ் வழங்கும்.
இருப்பினும் ஜியோ ரூ.1748 விலையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டம் 336 நாட்கள் என்ற சற்று குறைவான வேலிட்டி கொண்டதாகவும் 3,600 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பை உள்ளடக்கியது.
Airtel Best Plan
ஏர்டெல் அண்மையில் குரல் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் 84 நாள் திட்டத்தை கொண்டு வந்தது. இது முன்பு ரூ.499 ஆக இருந்த நிலையில், இப்போது விலை ரூ.469 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏர்டெல் அதன் 365 நாள் திட்டத்தையும் திருத்தியது. இது முதலில் ரூ.1959 ஆக இருந்தது. இப்போது ரூ.1,849க்கு கிடைக்கிறது.
பெருமளவு விலை குறைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு தனியாக திட்டம் கொண்டு வர வேண்டும் என டிராய் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் செல்போன் நிறுவனங்கள் புதிய திட்டங்களை கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
BSNLக்கு பெரிய அதிர்ச்சி.. 3 லட்சம் பேர் எஸ்கேப்.. ஏன் தெரியுமா.?