JIO and Airtel
டிராய் புதிய விதிகள்
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. தனியார் தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பல்வேறு சலுகை விலையில் திட்டங்களை அறிவித்து போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா ஆகியவற்றை கொண்ட தொகுப்பு ரீசார்ஜ் திட்டங்களை தான் செயல்படுத்தி வருகின்றன. கால்ஸ் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் ஏதும் இல்லை.
இதனால் டேட்டா பயன்பாடு தேவையில்லாத வாடிக்கையாளர்களும் கால்ஸ் வசதி, எஸ்எம்எஸ் வசதி மற்றும் டேட்டா வசதி கொண்ட தொகுப்பு திட்டங்களை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இந்த தொகுப்பு திட்டங்களுக்கு கட்டணம் அதிகமாக உள்ளது.
Calls and SMS Plans
பணிந்த செல்போன் நிறுவனங்கள்
இதனால் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்க்கு ஒரு தனித்துவமான ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு கடந்த மாதம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)அதிரடி உத்தரவிட்டது. டிராய் உத்தரவால் இப்போது செல்போன் ரீசார்ஜ் நிறுவனங்கள் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் தனியாக பிளான்களை கொண்டு வந்துள்ளன.
பிஎஸ்என்எல் பேன்சி நம்பர் விற்பனை ஆரம்பம்! ஒரு நம்பருக்கு விலை எவ்வளவு தெரியுமா?
JIO Plan
ஜியோவின் கால்ஸ் ஒன்லி பிளான்
ஜியோ ரூ.458 மற்றும் ரூ.1958 விலையில் இரண்டு பட்ஜெட் கால்ஸ் ஒன்லி பிளான்களை கொண்டு வந்துள்ளது. ரூ.458 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 1000 இலவச எஸ்எம்எஸ் அடங்கும்.
ஜியோவின் ரூ.1958 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் ஆண்டு முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்ஸ் வசதியை அனுபவிக்க முடியும், அத்துடன் 3600 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.
Aitel Plan
ஏர்டெல் திட்டங்கள்
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு கால்ஸ் ஒன்லி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது: ஒன்று ரூ.509 மற்றும் மற்றொன்று ரூ.1999 ஆகும். ரூ.509 திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் 84 நாட்களுக்கு வரம்பற்ற கால்ஸ் அழைப்பையும், 900 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
ரூ.1999 திட்டத்திற்கு ஏர்டெல் ஒரு முழு வருட வேலிடிடிட் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இந்தத் திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 3600 இலவச SMS ஆகியவை அடங்கும்.