ஜியோ Fiber பெஸ்டு பிளான்! 100 Mbps சூப்பர் ஸ்பீடு டேட்டா முதல் OTT வரை எல்லாமே இருக்கு!

First Published | Nov 5, 2024, 8:38 AM IST

குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட பிளானை விரும்புவோர் ஜியோ ஃபைபரின் மூன்று மாத திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டங்களில், 30Mbps முதல் 100Mbps வரை ஹைஸ்பீடு டேட்டாவைப் பெறலாம். OTT சப்ஸ்கிரிப்ஷன்களும் இலவசமாகக் கிடைக்கும்.

Jio Fiber Best Plans

குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட பிளானை விரும்புவோர் ஜியோ ஃபைபரின் மூன்று மாத திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் திட்டங்களில், 30Mbps முதல் 100Mbps வரை ஹைஸ்பீடு டேட்டாவைப் பெறலாம்.

Jio Fiber affordable plans

ஜியோ ஃபைபரின் மூன்று மாதங்களுக்கான திட்டங்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் வேகமான இன்டர்நெட் வசதியை வழங்குகின்றன. இவற்றில் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் 14 OTT சந்தாவும் இலவசமாகவே கிடைக்கும் என்பது இதில் உள்ள சிறப்பு அம்சம்.

Tap to resize

Jio Fiber 599 plan

1797 + ஜிஎஸ்டிக்கு மூன்று மாதங்களுக்கு திட்டத்தை ஜியோ ஃபைபர் வழங்குகிறது. இத்திட்டத்தில், மாதம் 599 செலவில் அன்லிமிட்டெட் டேட்டாவைப் பெறுலாம். இந்த திட்டம் 30Mbps அப்லோட் மற்றும் டவுன்லோட் வேகத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இலவச வாய்ஸ் கால் வசதியும் கிடைக்கும். 800க்கும் மேற்பட்ட டிவி சேனல்களையும் பார்க்கலாம். இதனுடன், Disney + Hotstar, Sony Liv, Zee5 மற்றும் Jio Cinema Premium உட்பட மொத்தம் 12 OTT தளங்களையும் இலவச பயன்படுத்தலாம்.

Jio Fiber 888 plan

இந்த திட்டத்தின் மூன்று மாதங்களுக்கான கட்டணம் ரூ. 2664 + ஜிஎஸ்டி. இதில் மாதம் 888 ரூபாய் செலவில் பல நன்மைகளைப் பெறலாம். 30Mbps அப்லோட் மற்றும் டவுன்லோட் வேகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இலவச வாய்ஸ் கால் மற்றும் 800க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும் கிடைக்கும். நெட்ஃபிக்ஸ் உட்பட 14 OTT தளங்களுக்கான இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் அடங்கும்.

Jio Fiber 899 plan

ரூ.2697 + ஜிஎஸ்டி செலுத்தி மூன்று மாதங்களுக்கான ஜியோ ஃபைபர் திட்டத்தில் சேர்ந்தால், மற்ற திட்டங்களைப் போலவே வரம்பற்ற டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் 100Mbps அப்லோட் மற்றும் டவுன்லோட் ஸ்பீடு கிடைக்கிறது. இலவச வாய்ஸ் கால், 800க்கும் மேற்பட்ட டிவி சேனல்ககள், டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ் உள்ளிட்ட 12 OTT தளங்களுக்கான இலவச சந்தா ஆகியவையும் இத்திட்டத்தில் கிடைக்கும்.

Latest Videos

click me!