இலவசம்!..இலவசம்!.. ஜியோ ஆண்டு விழா சலுகை அக்டோபர் 5 வரை.. எதெல்லாம் தெரியுமா?

Published : Sep 04, 2025, 01:02 PM IST

ஜியோ தனது 9வது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய ரீசார்ஜ் திட்டங்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் கூடுதல் நன்மைகளை அறிவித்துள்ளது. 5G மற்றும் 4G பயனர்களுக்கு தனித்தனி சலுகைகள் மற்றும் ஜியோஹோம் சந்தாவிலும் சிறப்பு சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

PREV
14
ஜியோ ஆண்டு விழா சலுகை

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது 50 கோடி பயனர்களை எட்டியுள்ள நிலையில், தனது 9வது ஆண்டு விழா செப்டம்பர் 5 அன்று கொண்டாடுகிறது. இதையொட்டி, நிறுவனம் பயனர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5, 2025 வரை கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24
ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்

பிரபலமான ரூ.349 திட்டம் தற்போது “ஜியோ செலிபிரேஷன் பிளான்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி டேட்டா பயன்பாடு வழங்கப்படுவதோடு, பல கூடுதல் சலுகைகளும் இதில் உள்ளன அடங்குகின்றன. 1 மாத JioHotstar சந்தா, JioSaavn பயன்பாடு, இலவச JioHome சோதனை, 3 மாத Zomato தங்கம், 6 மாத NetMeds சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இதில் வழங்கப்படுகின்றன. மேலும் Ajio, EaseMyTrip மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற தளங்களில் கூடுதல் சலுகைகள் உள்ளன. தொடர்ந்து 12 மாதங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், ஒரு மாதம் இலவச ரீசார்ஜ் கிடைக்கும்.

34
ஜியோ 349 பிளான்

5G மற்றும் 4G பயனர்களுக்கு தனிப்பட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 5 முதல் 7 வரை 5G பயனர்கள் முற்றிலும் இலவசமாக கூடுதல் டேட்டா பெறுவார்கள். அதே நேரத்தில், 4G பயனர்கள் ரூ.39க்கு ஆட்-ஆன் மூலம் வரம்பற்ற டேட்டாவைச் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம், இரு வகை பயனர்களும் கூடுதல் நன்மைகளை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.

44
ஜியோ 5G டேட்டா

ஜியோஹோம் சந்தாவும் சிறப்பு சலுகையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக சந்தா எடுப்பவர்கள் ரூ.1200க்கே சேவையைப் பெற முடியும். இதில் 1000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், 12 OTT சந்தாக்கள் மற்றும் 30 Mbps வேகமுள்ள வரம்பற்ற இணைய சேவைகள் கிடைக்கும். கூடுதலாக இரண்டு மாத Amazon Prime Lite, ரீசார்ஜ் வவுச்சர்கள் மற்றும் Jio Finance வழியாக 2% கூடுதல் டிஜிட்டல் தங்கம் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories