Jio AI Glasses: கண்ணாடியை போடுங்க, QR கோட் பாருங்க, பேமெண்ட் பண்ணுங்க! ஜியோ AI கிளாஸின் ஸ்பெஷல் என்ன?

Published : Oct 13, 2026, 05:36 PM IST

Jio AI Glasses: ஜியோ AI கண்ணாடி மூலம் QR கோடைப் பார்த்து குரல் வழி UPI பரிவர்த்தனை செய்யலாம். ரூ.5,000 வரை செலுத்தலாம். இதன் விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்து பார்ப்போம்.

PREV
14
ஜியோ AI கிளாஸின் ஸ்பெஷல் என்ன?

கடைகளுக்கு சென்றால் செல்போனை எடுத்து, யுபிஐ செயலியைத் திறந்து, க்யூஆர் கோட் ஸ்கேன் செய்துதான் நாம் பணம் செலுத்துகிறோம். ஆனால், இந்தச் செயலை இன்னும் எளிமையாக்க ஜியோ நிறுவனம் புதிதாக ஏஐ கேமரா கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கண்ணாடியை அணிந்துகொண்டு கடையில் உள்ள க்யூஆர் கோடைப் பார்த்தாலே போதும், கேமரா அதனை ஸ்கேன் செய்துவிடும்.

அதன்பிறகு வாய்ஸ் கமெண்ட் (Voice Command) மூலம் நாம் பணம் செலுத்திக் கொள்ளலாம். பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதும் பரிவர்த்தனை முடிந்துவிடும். இதனால் சிறிய தொகைகளுக்கான பண பரிவர்த்தனைக்குக் கூட மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.

24
ஒரு முறைக்கு ரூ.5,000 வரை செலுத்தலாமா?

இந்த வசதியில் யுபிஐ சர்க்கிள் (UPI Circle) அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதிகளின்படி, ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரையிலும், மாதத்திற்கு மொத்தம் ரூ.15,000 வரையிலும் பணம் செலுத்த முடியும். இந்த வரம்பை ஜியோ தனியாக நிர்ணயிக்கவில்லை. இது யுபிஐ சர்க்கிள் விதிகளுக்கு உட்பட்டது.

பல இந்திய மொழிகளுக்கு ஆதரவு

ஜியோ ஏஐ ஸ்மார்ட் கண்ணாடியின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் 'நேரலை மொழிபெயர்ப்பு' (Live Translation) ஆகும். வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் ஒருவருக்கொருவர் எளிதாகப் பேசிக்கொள்ள இந்தத் தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பயணம் செய்யும்போதோ அல்லது வேலை செய்யும்போதோ மொழி ஒரு தடையாக இருந்தால், இந்த வசதி அதனைச் சரிசெய்துவிடும். இந்திய மொழிகளை ஆதரிக்கும் ஏஐ குரல் உதவியாளர் (AI Voice Assistant) வசதியும் இந்தக் கண்ணாடியில் உள்ளது.

34
ஏஐ குறிப்புகள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையும் உண்டு

கூட்டங்கள் அல்லது முக்கியமான உரைகளைப் பதிவு செய்து குறிப்புகளை எடுக்கும் ஏஐ குறிப்பு எழுதும் (AI Note-taking) வசதியும் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி, பயணம் செய்யும்போதோ அல்லது வேறு வேலையில் இருக்கும்போதோ கிரிக்கெட் போட்டியின் நேரலை வர்ணனையைக் கேட்கும் வசதியையும் ஜியோ காட்டியுள்ளது.

இதன் காரணமாக, இந்த ஸ்மார்ட் கண்ணாடி வெறும் ஃபேஷன் பொருளாக மட்டும் இல்லாமல், பணம் செலுத்துவது மற்றும் தகவல் தொடர்பு எனப் பல விஷயங்களுக்கு உதவும் ஒரு சிறந்த சாதனமாக மாற வாய்ப்புள்ளது.

44
விலை எவ்வளவு? எப்போொழுது சந்தைக்கு வரும்?

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026 நிகழ்ச்சியில்தான் ஜியோ இந்த சாதனத்தை காட்சிப்படுத்தியது. ஆனால், இதன் உண்மையான விலை என்ன, எப்பேொழுது சந்தைக்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனவே, இதனை வாங்க விரும்புகிறவர்கள் நிறுவனத்தின் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

மொத்தத்தில், கண்ணாடியை அணிந்துகொண்டு க்யூஆர் கோடைப் பார்த்து, குரல் மூலமாக யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்யும் இந்த யோசனை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இது எந்த அளவுக்கு எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பது சந்தைக்கு வந்த பின்னர்தான் முழுமையாக தெரியவரும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories