ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபோன் 17 ப்ரோ குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அலுமினியம் ஃபிரேம், மிகப்பெரிய கேமரா அமைப்பு, சக்திவாய்ந்த ஏ19 ப்ரோ சிப் என பல மாற்றங்களுடன் இந்த போன் 2025-ல் வெளியாக உள்ளது. ஐபோன் 16 தொடர் விற்பனையில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஐபோன் 17 ப்ரோ குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் டைட்டானியம் ஃபிரேமை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ஆனால், ஐபோன் 17 ப்ரோவில் மீண்டும் அலுமினிய ஃபிரேமை பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுமினியம் டைட்டானியத்தை விட கார்பன் வெளியீட்டை குறைப்பதால், 2030-க்குள் கார்பன் நடுநிலைமையை அடையும் ஆப்பிளின் இலக்கை இது பூர்த்தி செய்யும். ஐபோன் 17 ப்ரோவில் இரு வண்ண வடிவமைப்பு (dual-tone finish) இருக்கும் என்றும், கேமரா அமைப்பு மற்ற பகுதிகளை விட கருப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கேமரா அமைப்பும் முந்தைய மாடல்களை விட பெரிதாக இருக்கும்.
24
பெரிய பேட்டரி?
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் தடிமன் சற்று அதிகரிக்கலாம். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 8.25 மிமீ தடிமன் கொண்டிருக்கும் நிலையில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் 8.725 மிமீ தடிமன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சிறிய மாற்றம் பெரிய பேட்டரியை பொருத்த ஆப்பிளுக்கு உதவும்.
கேமராவில் புரட்சி!
ஐபோன் 17 ப்ரோவின் கேமரா அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் அகலம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு பெரிய கேமரா அமைப்பை இந்த போன் கொண்டிருக்கும். அதில் மூன்று கேமராக்கள், மைக்ரோஃபோன், LiDAR ஸ்கேனர் மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவை இருக்கும். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தொழில்முறை கேமராக்களுக்கு பதிலாக ஐபோன் 17 ப்ரோவைப் பயன்படுத்தும் வகையில், அதன் லென்ஸ்களை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
34
ஏ19 ப்ரோ சிப்!
ஆப்பிளின் புதிய மற்றும் சக்திவாய்ந்த ஏ19 ப்ரோ சிப் ஐபோன் 17 ப்ரோவில் இடம்பெறும். TSMC-ன் 3nm தொழில்நுட்பத்தில் இந்த சிப் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்திறன், வேகமான ஆப் திறப்பு மற்றும் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
44
iPhone 16 Pro and 16 Pro Max
வெளியீட்டு தேதி மற்றும் விலை
ஆப்பிள் வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன்களை வெளியிடும். எனவே, ஐபோன் 17 தொடரும் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஐபோன் 17 ப்ரோவின் விலை சுமார் ரூ. 1,20,000 ஆகவும், ஐபோன் 17 விலை சுமார் ரூ. 79,000 ஆகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக ஐபோன் 17 ஏர் மாடலை ஆப்பிள் அறிமுகப்படுத்தலாம். அதன் விலை சுமார் ரூ. 89,900 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.